திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட்
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 5 தொகுதிகளை இறுதி செய்வதில் தான் இழுபறி நீடித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அதேபோல் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருவதும் தெரிய வந்திருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், விசிகவுக்கு 8 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கொமதேக, மமக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், முக்குலத்தோர் புலிப்படை, மஜக, தமிழர் தேசிய கட்சி உள்ளிட்டோருக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிடும் என்ற முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காங்கிரஸ் கொடுத்துள்ள விருப்ப தொகுதிகளின் பட்டியல் வைத்து திமுக ஆலோசனை நடத்தியது.
இதன்பின் நேற்றிரவு முதலே அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் உள்ளிட்டோரும், திமுக தரப்பில் சீனியர்களும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி நேற்றிரவு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டது.
ஆனால் மீதமுள்ள 5 தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். ஆனாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை பேசுகையில், திமுக உடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.
தென்காசி, விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. தோழமை கட்சிகள் கேட்டு கொண்டதால், 2 தொகுதிகளை திமுகவால் கொடுக்க முடியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் பெற்றுள்ளோம். 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுவிட்டோம். கன்னியாகுமரியில் 3ல் போட்டியிடுகிறோம்.
சிட்டிங் எம்எல்ஏ தொகுதியை கொடுப்பதில் சிக்கல் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியை கேட்கிறார்கள். அதனை நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்றும் உறுதி செய்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications