நான் கேட்டிருந்தா தென்சென்னையை தந்திருப்பாங்க.. ஆனா தமிழச்சி ஏமாந்து இருப்பாங்க! ரகசியம் உடைத்த கமல்
சென்னை: ‛‛நான் கேட்டிருந்தா தென்சென்னை தொகுதியை திமுக எனக்கு தந்திருக்கும். ஆனால் தமிழச்சி ஏமாந்து இருப்பாங்க'' என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தென்சென்னை லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பியாக தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளார். இவர் மீண்டும் அந்த தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இங்கு பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனும், நாம் தமிழர் சார்பில் தமிழ் செல்வியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தான் திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து திமுக கூட்டணியில் உள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அந்த சமயத்தில் தென்சென்னை தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என அவர் விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசியதாவது: நான் கேட்டிருந்தால் தமிழச்சி நிற்கும் சீட்டை எனக்கு கொடுத்து இருப்பாங்க.ஆனால் தமிழச்சி ஏமாற்றமடைந்து இருப்பாங்க. ஆனால் நான் சீட்டுக்காக வரவில்லை. எந்த சீட்டில் நான் நிற்பேன் என்று நினைத்தார்களோ அந்த தொகுதியில் இப்போது ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். எனக்காக அல்ல இவருக்காக (தமிழச்சி தங்கபாண்டியனை கைகாட்டி).

அதனால் தான் முதலில் சொன்னேன். இத்தகை கொடிகள் பறக்கிறது. அதுவெல்லாம் ஒரு கொடிக்காக. தேசியக்கொடிக்காக. தேசியக்கொடியின் அர்த்தத்தை மறந்துபோகக்கூடியவர்கள் இங்கு உள்ளனர். அதற்கு நீங்கள் இடம் கொடுக்க கூடாது. மேலும் அடுத்த முறை தேர்தல் வருமோ வராதோ என அறிஞர்கள் பயப்படுகின்றனர். அறிஞர்கள் பயப்பட்டால் மட்டும் போதும். நாம் அதனை செயல்படுத்த வேண்டும். உங்கள் விரல் அசைவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஜனநாயகத்தில் ஒருவரை அடிக்க முடியாது. ஆனால் கொள்கை ரீதியாக ஒருவரை திருப்பி அடிக்கலாம். அப்படி பாஜகவுக்கு அடி கொடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். முக்கியமாக சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்கிறார். இதனால் தான் என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் இங்கு வந்து நிற்கிறோம்'' என்றார்.
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் சேர உள்ளதாக கூறப்பட்டபோது அவர் தென்சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசியில் திமுக தென்சென்னை தொகுதியை தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஒதுக்கியதோடு, மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரேயொரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்கியது. இந்நிலையில் தான் கமல்ஹாசன் இப்படி பேசியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications