இபிஎஃப்ஓ கணக்கு இருக்கா? நாடு முழுக்க உள்ள தனியார், அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கவனம்
சென்னை: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஜூலை 28, 2025-க்குள் ஒரு புதிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் ஓய்வூதிய பலன்களை இழக்க நேரிடும் என்றும் பல செய்திகள் வெளியாகின. ஆனால், அது போலியானது என்று கண்டறியப்பட்டது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய படிவம் எதையும் வெளியிடவில்லை என்று அறிவித்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. ஜூலை 28, 2025க்குள் "புதிய EPFO படிவம்" சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையில் EPFO எந்த புதிய படிவத்தையும் வெளியிடவில்லை. புதிய படிவத்தை சமர்ப்பிக்காத காரணத்தினால் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும் என்று எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இதுகுறித்து பி.ஐ.பி உண்மைச் சரிபார்ப்பு எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், "ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும், அதில் ஜூலை 28, 2025க்குள் புதிய EPFO படிவத்தை சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும் என்றும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்தத் தகவல் பொய்யானது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எந்த புதிய படிவத்தையும் வெளியிடவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
சரியான தகவல்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களையே பார்க்க வேண்டும் என்றும் பயனர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, EPFO-விடமிருந்து வரும் எந்த அப்டேட்களும் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மூலம் தெரிவிக்கப்படும்.
பணம் எடுக்கும் வரம்பு அதிகரிப்பு
EPFO ஆட்டோமெட்டிக் முறையில் தரப்படும் செட்டில்மென்டுகள், அதாவது கூடுதல் பரிசோதனை இல்லாமல், அடிப்படை பரிசோதனைகளை மட்டும் வைத்து வழங்கப்படும் செட்டில்மென்டுகளுக்கான தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதாவது நீங்கள் உங்களின் பிஎப் பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பணத்தை தர கூடுதல் சோதனைகள் இருக்காது. எப்போதும் செய்யப்படும் பான் கார்டு சோதனை, வங்கி கணக்கு சோதனை ஆட்டோமெட்டிக் முறையில் செய்யப்படும். அதன்படி தானாக 3 நாட்களில் உங்கள் கணக்கிற்கு பணம் வந்துவிடும்.
வேகம் காட்டும் பிஎப்
ஏற்கனவே EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் க்ளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆட்டோ மோட் முறையில் இத்தனை கிளைம்களை நிறைவேற்றி உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.
இப்போது, 60 சதவீத அட்வான்ஸ் (திரும்பப் பெறுதல்) EPFO உரிமைகோரல்கள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகின்றன என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார். இதனால் வேகமாக பணம் மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அதாவது அதிகாரிகள் சோதனை செய்யாமல் தானாக கணினியே ஆவணங்களை சோதனை செய்து 3 நாட்களில் பணத்தை வழங்கிவிடும்.
EPFO அட்வான்ஸ் கேட்டு 1-2 மாதம் காத்திருக்க வேண்டியது இல்லை. முன்பு இதற்கான கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போது 1 லட்சம் ரூபாய் வரை எளிதாக பணம் எடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு உள்ளது. நோய்/மருத்துவமனை தொடர்பான உரிமைகோரல்கள் மட்டுமன்றி, வீடு, கல்வி மற்றும் திருமணம் ஆகியவற்றிற்கான அட்வான்ஸ் தொகையும் ஆட்டோ மோடு முறையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் EPFO சார்பாக கடந்த சில நாட்களில் 21.6 மில்லியன் க்ளைம்களை 3 நாள் காலக்கெடுவுக்குள் வழங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
EPFO 3.0 மே அல்லது ஜூன் 2025க்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மாற்றம் அமலுக்கு வந்த பின் ஏடிஎம் வழியாக EPFO நிதி திரும்பப் பெறுதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல எளிமையான சேவைகளைக் இந்த முறை மூலம் கொண்டு வருவோம் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications