அவங்க போட்டோவை வைக்காதீங்க.. கோபத்தின் உச்சிக்கே போன எடப்பாடி.. கண்டிப்பான உத்தரவு.. பெருசாகுதே!
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவுவதாக செய்திகள் வரும் நிலையில்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உத்தரவிற்கு பின்பான உண்மைதன்மை தெரியவில்லை.
அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சம் அடைந்து இருக்கிறது. நேற்று கூட்டணி குறித்து வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக பாஜக இடையிலான கூட்டணி முறிந்த நிலையில்.. இதுவரை அதை பற்றி ஒருவார்த்தை கூட பேசாமல் எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்து வந்தார். அவரின் மௌனம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.

கூட்டணி முறிவு குறித்த அறிவிப்பு எதிலும் எடப்பாடி பழனிசாமி நேரில் தலையிடவே இல்லை. முதலில் கூட்டணி முறிந்துவிட்டது. பாஜக - அதிமுக இடையே எங்களுக்கு உறவு இல்லை என்று கூறியது ஜெயக்குமார்.
இதுதான் கட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு என்று கூறினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி எதையும் சொல்லவில்லை. அடுத்து அதிமுக கட்சி கூட்டம் நடந்தது. இதிலும் கூட எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி பிரிவை பற்றி பேசியதாக தெரியவில்லை.
பாஜகவுடன் கூட்டணி இல்லை . பாஜக தலைவர் நம்மை அவமதித்து விட்டார். பாஜகவுடன் 2024ல் கூட்டணி இல்லை. 2026லும் கூட்டணி இல்லை. அதோடு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை அதிமுக தலைவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் மிக முக்கியம், என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக செய்திகள் வந்தன.
அதிமுக கூட்டத்தில் அவர் இப்படி கூறியதாக செய்திகள் வந்தன. ஆனால் எடப்பாடி பழனிசாமி உண்மையில் அப்படி கூறினாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அதிகாரபூர்வமாக கூட்டணி அறிவிப்பை அவர் வெளியிடவில்லை.
இது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் நேற்று.. இந்த முடிவை தொண்டர்கள் எடுத்தனர். நான் எடுக்கவில்லை. பல கோடி தொண்டர்களின் முடிவு இது. என்னுடைய முடிவு கிடையாது இது.. தொண்டர்களின் முடிவு இது. பாஜகவுடன் கூட்டணி முறிந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் .
என்ன உத்தரவு: இந்த நிலையில்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உத்தரவிற்கு பின்பான உண்மைத்தன்மை தெரியவில்லை.
அதன்படி கட்சியில் சில காலத்திற்கு வேறு யாருடைய முகத்தையும் பெரிதாக போட்டு போஸ்டர் ஒட்ட கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாம். அதாவது அதிமுக உள்ளே.. ஏக்நாத் ஷிண்டே ஒருவர் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். அந்த ஏக்நாத் ஷிண்டே யார் என்பதும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக "2 விஐபிகள்" எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி உள்ளதாக செய்திகள் வருகின்றன. அதாவது எடப்பாடி பழனிசாமி ஒருவேளை பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்கவில்லை என்றால் அவர்கள் கட்சியை முறிக்க கூட தயாராக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது எடப்பாடிக்கு தெரிந்து அவரும் கோபத்தில்தான் இருக்கிறாராம்.
இந்த நிலையில்தான் அதிமுக போஸ்டர்களில் தன்னை விட பெரிதாக வேறு யாருடைய முகத்தையும் வைக்க கூடாது. தன்னுடைய முகத்தை மட்டுமே போட்டோக்களில், போஸ்டர்களில் பயன்படுத்த வேண்டும். வார்டு அளவில் வேறு கூடுதல் புகைப்படங்களை பயன்படுத்தலாம். ஆனால் பெரிதாக பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications