தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறையா? ஓரிரு நாளில் அரசு முடிவு? மாணவர்கள் மகிழ்ச்சி
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம்.

இதனால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 தினங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த செவ்வாய்கிழமை வேலை நாள் என்பதால் திங்கள்கிழமை இரவே சொந்த ஊர் சென்றவர்கள் அடித்துபிடித்துக் கொண்டு சென்னை திரும்ப வேண்டும்.
மேலும் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். எனவே செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக நடுவில் வெள்ளிக்கிழமை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் வியாழன், வெள்ளி், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுப்பு கிடைத்தது. அது போல் இந்த ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேறொரு சனிக்கிழமை அன்று பணி நாளாக தமிழக அரசு அறிவிக்கலாம் என பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications