கிரெடிட் கார்டு போட்டு ஏடிஎம்மில் பணம் எடுக்கறீங்களா?.. அப்போ ரொம்ப டேஞ்சர்!
சென்னை: உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கிறதா, அப்படியென்றால் அதை வைத்து ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்காதீர்கள்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என இரு அட்டைகள் உள்ளன. இதில் கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வரம்பிற்கும் கடன் வாங்க அனுமதிக்கிறது. அதாவது அந்த வரம்பானது அவர்களுடைய ஊதியத்தை பொருத்தும் , ஏற்கெனவே கடனை திருப்பி செலுத்தியதை பொருத்தும் தீர்மானிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு கடன் அட்டை. டெபிட் கார்டு- நீங்கள் வங்கிக் கணக்கில் சேமித்து வைத்துள்ள பணத்தை ஏடிஎம்மில் எடுப்பதற்கோ செலவு செய்வதற்கோ ஆகும்.

வாடிக்கையாளர்கள் அந்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். இன்று கிரெடிட் கார்டு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி அந்த கார்டு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. அதாவது மாத கடைசியில் பணம் இல்லாத நேரத்தில் பெட்ரோல் போடுவதற்கும், மளிகை பொருட்களை வாங்குவதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.
ஆனால் கிரெடிட் கார்டுகளை பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதை பயன்படுத்தினால், அது கழுத்தை நெரிக்காது. இது தெரியாமல் பலர் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு கஷ்டப்படுவார்கள். இதனால் மற்றவர்கள் படும் அவதியை பார்த்துவிட்டு இந்த கார்டுகள் குறித்து பலருக்கு எதிர்மறையான எண்ணங்கள் பலருக்கு உள்ளது.
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நண்பர்களே...
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) January 7, 2024
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் கிரிடிட் கார்டை பயன்படுத்தி ATM மிஷின் இருந்து பணத்தை எடுக்காதீர்கள். உலகத்திலேயே அதிக வட்டி அந்த பணத்திற்கு தான். அதற்குப் பதிலாக கிரெடிட் கார்டில் இருந்து பேங்க் அக்கவுண்ட்க்கு பணம் மாற்றும்… pic.twitter.com/C8HMAQlqkP
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா. அதாவது வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. அந்த தொகை கார்டுக்கு கார்டு மாறுபடும். சில வங்கிகள் சில நேரங்களில் இலவச கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.
அதாவது குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ பராமரிப்பு கட்டணம் கட்டத்தேவையில்லை என்பதுதான். உங்களுக்கு அந்த கார்டில் இருக்கும் மொத்த கடன் வரம்பின் ஒரு பகுதியை நீங்கள் தேவைப்பட்டால் பணமாக எடுத்துக் கொள்ளலாம். கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் நேரடியாக ஏடிஎம்மில் இருந்து எடுத்து கொள்ளலாம். அவ்வாறு பணம் எடுக்கும் போது அதற்கான வட்டி அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
அவ்வாறு வசூலிக்கும் போது அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதுகுறித்து Film food Fun & Fact என்ற இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நண்பர்களே...
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் கிரிடிட் கார்டை பயன்படுத்தி ATM மிஷினில் இருந்து பணத்தை எடுக்காதீர்கள். உலகத்திலேயே அதிக வட்டி அந்த பணத்திற்கு தான். அதற்குப் பதிலாக கிரெடிட் கார்டில் இருந்து பேங்க் அக்கவுண்ட்க்கு பணம் மாற்றும் செயலிகளை பயன்படுத்தலாம்.
இருப்பதிலேயே குறைவான சேவைகட்டணம் வசூலிப்பது CRED ஆப் தான். (1.6 %). சில சமயம் தவறுதலாக டெபிட் கார்டுக்கு பதிலாக கிரெடிட் கார்டை ஏடிஎம்மில் செலுத்தி பணம் எடுத்து விடுவோம். அதை தவிர்க்க டெபிட் கார்டுக்கு கிரெடிட் கார்டுக்கும் வேறு வேறு PIN code வைக்கவும். இவ்வாறு அந்த எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அது போல் டிவி, பிரிட்ஜ், போன் உள்ளிட்ட பொருட்களை கிரெடிட் கார்டு மூலம் வாங்கிவிட்டு அதை மாத தவணைகளாகக் கூட மாற்றிக் கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications