கிரயம் முடிக்கிறீங்களா? கிரையப்பத்திரம் ரத்து பண்றீங்களா? நிலத்தை கிரையம் செய்யும்போது இதை கவனியுங்க
சென்னை: நிலத்தை கிரையம் செய்யும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? எப்போதுமே பத்திரங்கள் தமிழ் மொழியில் மட்டும்தான் பதிவு செய்யப்படுகிறதா?
தமிழகத்தில், ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரைய பத்திரம் ஆகும். இந்த கிரையப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவதன் பெயர் கிரயப் பத்திரப்பதிவாகும்.

பதிவுக்கட்டணம்: 2 மாதங்களுக்கு முன்பு, பத்திரப்பதிவில் புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி கிரைய பத்திரத்தை ரத்து செய்தால் அதற்கு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
அந்த பத்திரத்தில் முன்பிருந்த நடைமுறையான "இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது" என்ற முத்தி்ரை இனி குத்தப்படாது. இதன் மூலம் ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கு மறுபடியும் சொத்து சென்று விடும்.. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த நடைமுறையானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
அடையாள அட்டை: எப்போதுமே கிரையம் பதியும்போது, நிலத்தை எழுதி தருபவர் பெயர், அவரது அடையாள அட்டை, முகவரி, பட்டா விவரம் போன்றவை எல்லாமே, மற்ற ஆவணங்களில் உள்ளது போலவே, பத்திரத்திலும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.. இதில் நபரின் இன்ஷியல் தவறில்லாமல் எழுதப்பட வேண்டும்.
கிரயம் எழுதி தருபவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது? கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது? கிரயம் நிச்சயித்த தொகை? முன்பணம் தரப்பட்டது எவ்வளவு? காசோலையாக தரப்பட்டது எவ்வளவு? பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டது எவ்வளவு என்பதெல்லாம் தெளிவாக குறிப்பிடுவது நல்லது.
கையொப்பம்: முக்கியமாக, பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் போடப்பட்டிருக்கிறதா? எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர், முகவரியுடன் கையொப்பம் போட்டிருக்கிறார்களா? என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
அதேபோல, பத்திரங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்து, பிரிண்டிங் செய்யும் முன்பு ஒரு டிராப்ட் மாதிரி எடுத்து அதில் பிழைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்... பதிவு செய்த பிறகு பிழைகளை கண்டறியப்பட்டால், ஆவணங்களில் கையெழுத்திட்டவர்கள் நேரில் பத்திரப்பதிவு அலுவலகம் வந்து, பிழை திருத்தல் ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும்.
தாய்மொழிகள்: பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களில் உள்ள சார்பதிவு அலுவலகங்களில் தமிழ் மொழியில்தான் அதிகமாக கிரைய பத்திரங்கள் எழுதப்படுகின்றன. அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சார்பதிவகங்களிலும் ஆங்கிலம் பத்திரங்களும் பதிகின்றனர்.
அதேபோல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே, கன்னடம், உருது, மலையாளம், தெலுங்கு பேசும் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.. எனவே, பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்துகின்ற மொழியில் பத்திரபதிவு செய்யலாம்..
மொழி: ஆனால் எப்படியிருந்தாலும் மேற்படி பத்திரத்தின் மொழிபெயர்ப்புகளை தமிழிலோ, ஆங்கிலத்திலோ பதிவு செய்யும் பத்திரத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும்.. நீங்கள் வேறு மொழி பத்திரங்களின் அடிப்படையில் பத்திரம் வாங்குவதென்றால், அந்த மொழியில் பரிச்சயமுள்ள சட்ட வல்லுனர்கள் கருத்தை பெற்று சொத்து வாங்கும் முடிவுகளை எடுப்பது நல்லதாகும்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு











Click it and Unblock the Notifications