தமிழ்நாட்டில் உருவாகப்போகும் அதிநவீன கிரிக்கெட் மைதானம்.. எங்கு தெரியுமா?
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்தை கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒதுக்கி உள்ளார்.இந்த நிதியை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி, கோபாலபுரத்தில் நவீன வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்துள்ளது.
சென்னையை விளையாட்டுகளுக்கு உகந்த சிறந்த நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இளம் விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கிலும், நல்ல இடத்தில் பயிற்சி பெற வேண்டும் என்ற நோக்கிலும் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள் தமிழக வீரர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரியபயிற்சி மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செம்பியத்தில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. இதுதவிர சென்னையில் 83 மைதானங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானம் சீர் செய்யப்படாமல் குப்பை, கிடங்கு போல் கிடந்தது.இதனை பார்த்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்தை கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒதுக்கி உள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டில் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த மைதானத்தில் 3-ல் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கான நிதியை ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ ந.எழிலன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குத்துச்சண்டை மையம்: இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் 3-ல் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த 2 பணிகளும் முடிவடையும் போது, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சியையும், குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சியையும், இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications