சிறுதுளி பெரு வெள்ளம்! ரிட்டயர்ட் ஆனதும் மீதி காலத்தை பண கஷ்டம் இல்லாமல் கழிப்பது எப்படி தெரியுமா?
சென்னை: உங்களது ஓய்வு காலங்களை மகிழ்ச்சியாகவும் பொருளாதாரச் சுதந்திரத்துடனும் கழிக்க என்ன வழி என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் கூறியிருப்பதாவது: உங்களது #Retirement காலங்களை மகிழ்ச்சியாகவும், பொருளாதாரச் சுதந்திரத்துடனும் கழிக்க என்ன வழி?

SIP மற்றும் SWP (Systematic Withdrawal Plan) மூலம் உங்களது பொருளாதாரச் சுதந்திரத்தை அடைவது இப்படிதான்...
Demat Account இல்லாதவர்கள், இந்த லிங்கை பயன்படுத்தி, புதிய கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.
https://tinyurl.com/27m7qwl7
நீங்கள் எவ்வளவு அதிகம் சேமிக்கிறீர்களோ, அதற்கேற்ற வகையில், அதிக தொகையினை மாதா மாதம் சம்பளம்/பென்ஷன் போல் நிலையான வருமானம் பெற்றுக்கொள்ளலாம்.

முதலீட்டு தகவல்கள்:
SIP முறையில், நல்ல நிறுவன பங்குகளிலோ அல்லது Multicap மற்றும் Index Fund களில் முதலீடு செய்ய வேண்டும். எதிர்பார்க்கும் வருமானம் - 12% CAGR (சந்தை நிலையினை பொறுத்து)
முதலீட்டு காலம் முடிந்தவுடன், மொத்த தொகையினை மூன்றாக பிரித்து...
60% Debt Funds
20% Hybrid Funds
20% Index Funds
என முதலீடு செய்து, ரிஸ்க்கை குறைத்துக் கொள்ளலாம். எதிர்பார்க்கும் ஆண்டு வருமானம் - 10% CAGR (சந்தை நிலையினை பொறுத்து)
சந்தையில் எவ்வளவு அதிக காலம் முதலீடு செய்து வருகிறீர்களா, உங்களது probability of profits அதற்கேற்றவாறு அதிகரிக்கும். Fund அல்லது Shares களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமாக செயல்படுங்கள்.

எஸ்ஐபியில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் 8 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஒரு மடங்காகவே அதாவது ரூ 10 ஆயிரமாகவே திரும்ப கிடைக்கும். அது போல் ரூ 10 ஆயிரத்தை 10 ஆண்டுகளுக்கு போட்டால் ஒன்றரை மடங்கு அதிகரித்து ரூ 15 ஆயிரமாக கிடைக்கும். ரூ 10 ஆயிரத்தை 12 ஆண்டுகளுக்கு போட்டால் இரு மடங்கு அதாவது 20 ஆயிரம் ரூபாயாக கிடைக்கும்.
ரூ 10 ஆயிரத்தை 15 ஆண்டுகளுக்கு போட்டால் மூன்று மடங்கு அதாவது 30 ஆயிரம் ரூபாயாக கிடைக்கும். ரூ 10 ஆயிரத்தை 20 ஆண்டுகளுக்கு போட்டால் ஐந்து மடங்கு அதாவது 50 ஆயிரம் ரூபாயாக கிடைக்கும். ரூ 10 ஆயிரத்தை 25 ஆண்டுகளுக்கு போட்டால் எட்டு மடங்கு அதாவது 80 ஆயிரம் ரூபாயாக கிடைக்கும். ரூ 10 ஆயிரத்தை 30 ஆண்டுகளுக்கு போட்டால் பன்னிரெண்டு மடங்கு அதாவது 1.20 லட்சம் ரூபாயாக கிடைக்கும். இவ்வாறு எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications