Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 "வயாகரா" மாத்திரை சாப்பிட்ட நபர்.. என்னாச்சு தெரியுமா.. எல்லாத்துக்கும் காரணம் "மாமியார்".. பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வயாகரா மாத்திரை 2 சாப்பிட்டாலே ஆபத்து என்கிறார்கள்.. ஆனால், ராஜசேகர் 10 எடுத்து சாப்பிட்டுவிட்டாராம்.. என்ன ஆச்சோ தெரியலையே அவருக்கு?

சாலிகிராமம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன்... சினிமா புரொடக்சனில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி.. இவர்களது மகள் புவனேஸ்வரி.

புவனேஸ்வரிக்கும், ராஜசேகருக்கும், கடந்த 2017-ல் திருமணம் நடந்துள்ளது.. மதுரையை சேர்ந்தவர் ராஜசேகர்.. சாப்ட்வேர் என்ஜினீயரும்கூட.. ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், தம்பதிக்குள் திடீரென கருத்து வேறுபாடு துவங்கி உள்ளது.. பிறகு சண்டையும், தகராறும் வெடித்து வந்திருக்கிறது.. ஒருகட்டத்தில் 2 பேருமே தனித்தனியாக பிரிந்துவிட்டனர்.

புவனேஸ்வரி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டார்.. இந்நிலையில், இவர்கள் ஒன்றாக சேர்ந்திருந்தபோது, வங்கியில் பணம் கடன் வாங்கியிருக்கிறார்கள்.. அதுதொடர்பாக புவனேஸ்வரியிடம் கேட்பதற்காக சம்பவத்தன்று ராஜசேகர், மாமியார் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது, அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.. இந்த தகராறு முற்றிப்போகவும், தன்னுடைய வீட்டுக்கு வந்து தகராறு செய்வதாக கூறி, மாமியார் பானுமதி, மருமகன் மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் தந்தார்.

மாமியார்: மாமியார் போலீசுக்கு போனதுமே, ராஜசேகருக்கு பீதி கிளம்பிவிட்டது.. எப்படியும் போலீஸ் வந்து நம்மை விசாரித்தால், மாட்டிக் கொள்வோம் என்று பயந்துபோனார்.. எதிர்பார்த்தபடியே போலீசும் வந்துவிட்டது.. விசாரணைக்காக ராஜசேகரை, ஸ்டேஷனுக்கும் அழைத்து போனது..

Do you know about viagra health issues and why did chennai saligramam engineer take ten viagra pills

ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்த ராஜசேகர், திடீரென தன்னுடைய கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்... இதைப்பார்த்து பதறிப்போன போலீசார் அவரை மீட்க முயன்றனர்.. அப்போது, தான் ஏற்கனவே வயாகரா உள்ளிட்ட 10 மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டேன் என்று பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை: அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாமியார் புகாரால் கைதாகாமல் இருப்பதற்காகவே, அவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது..

ஆனால், ராஜசேகர் என்ன நினைத்து வயாகராவை எடுத்து விழுங்கினாரோ, அதற்கு பலனில்லாமல் போய்விட்டது.. ராஜசேகர் மீது தகாத வார்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிட்டனர்.. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

வயாகரா: இந்த வயாகராவை டாக்டர் அட்வைஸ் இல்லாமல் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களும் வயாகராவை உட்கொள்ளக்கூடாது என்கிறார்கள்.. இதயம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் வயாக்ராவை உட்கொள்ளக்கூடாது என்கிறார்கள்.. காரணம், இது இதயத்தில் அழுத்தத்தை அதிகரித்துவிடும்.. மாரடைப்பு, பக்கவாதம் இருந்தாலும், வயாகராவை உட்கொள்ளக்கூடாது என்கிறார்கள்.

வயாகராவை மற்ற நைட்ரேட் மருந்துகளுடன் தவறுதலாக கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கிறார்கள். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவு 25 மில்லி கிராம்தானாம்..

மாத்திரைகள்: ஆனால், பெரும்பாலான ஆண்கள் இந்த அளவு தெரியாமல் 50 மில்லி கிராம், 100 மில்லி கிராம் என வீரியம் அதிகம் உள்ள High Dosage வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்த மாத்திரையில் இவ்வளவு எச்சரிக்கைகள் இருக்கும்போது, லபக்குன்னு அத்தனை மாத்திரைகளை ராஜசேகர் விழுங்கியிருக்கிறாரே? ராஜசேகர் எத்தனை வயாகராவை சாப்பிட்டார் என்றே தெரியலையே...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+