"மஞ்சள் சேலை" யார்னு பாருங்க.. எடப்பாடிக்காக "மண் சோறு" சாப்பிட்டு.. இவரா? மறுபடியும் முதல்ல இருந்தா?
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள்.. இதையடுத்து, அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார்கள்.. இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கின்றன.
கடந்த வருடம் மார்ச் மாதம், எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் 2 பேருமே அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.. விழாவில் கேக் வெட்டப்பட்டது..
கேக் ஊட்டினார்: எடப்பாடி பழனிசாமி வளர்மதிக்கு கேக் ஊட்டிவிட, ஓபிஎஸ் கோகுல இந்திராவுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர்... பிறகு இவர்களும் கேக் எடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு ஊட்டிவிட்டனர்.. இதற்கு பிறகு, வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம், அதிமுகவுக்குள் சசிகலா வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு வளர்மதி, "தலைவர்கள் இருக்கின்றனர். முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கிறது. சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுப்படி நடப்போம் என்றார்..
கோர்த்துவிடாதீங்க: உடனே செய்தியாளர்கள், சசிகலாவின் இணைப்பை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டனர். அதற்கு வளர்மதி, "ஊடகங்கள் எதையாவது கேட்டு எங்களை கோர்த்துவிட்டுடாதீங்க.. இதுபோன்ற விஷயங்களில் லிங்க் செய்துடாதீங்க.. தலைமையின் முடிவுக்கு எப்போதும் நாங்கள் கட்டுப்படுவோம்.. அவ்வளவுதான்" என்று பதிலளித்திருந்தார்.. இப்படி பொதுப்படையாக அன்று பேசினாலும்கூட, மாஜி அமைச்சர் வளர்மதி எடப்பாடி பழனிசாமியின் மிக தீவிரமான ஆதரவாளர் ஆவார்..
இதற்கு பிறகு, ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதுமே, எடப்பாடிக்கான தன்னுடைய ஆதரவை தெரிவிக்க துவங்கிவிட்டார்.. மோதலுக்கு காரணமான அந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, வரவேற்புரை ஆற்றியது முன்னாள் அமைச்சரான வளர்மதிதான்... எடப்பாடி பழனிச்சாமியை "அண்ணன், அண்ணன்" என்று அழுத்தமாக பலமுறை சொன்னதையும், ஓபிஎஸ்ஸை ஒருமுறைகூட சொல்லி அழைக்காமல் அவர் உரையாற்றியதையும் அனைவருமே அரங்கில் அங்கு கவனித்தனர்..

எடப்பாடி பழனிசாமி : அதுவும், எடப்பாடி பழனிசாமி வகித்த அத்தனை பதவிகளையும் மேடையில் அன்றைய தினம் லிஸ்ட் போட்டார். "காலையிலிருந்து நீங்களெல்லாம் வந்திருக்கிறீங்க.. இதை பார்த்தால் எம்ஜிஆர் பாட்டுதான் ஞாபகம் வருகிறது.. "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே".. அந்த தலைவன் இங்கேதான் இருக்கிறான்.. வருவான் வெளியே வருவான்.. வெகுவிரைவில் வருவான்" என்றார் வளர்மதி..
வளர்மதி உணர்ச்சிப்பூர்வமாக பேச பேச, பொதுக்குழு அரங்கில் கரகோஷம் அதிர்ந்தது.. இத்தனையும், ஓபிஎஸ்ஸை மேடையில் வைத்துக் கொண்டே வளர்மதி பேசியிருந்ததுதான், ஓபிஎஸ்-க்கு காயத்தை ஏற்படுத்தியதாக அப்போது சொன்னார்கள்.. அவ்வளவு ஏன்? 10 நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய வளர்மதி, "மானங்கெட்டவர்" என்று ஓபிஎஸை விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஒருமை பேச்சு: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வளர்மதி அப்போது கலந்து கொண்டிருந்தார்.. மகளிர் அணியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மகளிர் அணி பூத் கமிட்டி அமைத்தல், 2024 தேர்தல் பணிகள் குறித்து கட்சி அப்போது கூட்டத்தில் பேசும்போது, "பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை மேசையை தட்டி ரசிக்கிறார். திமுகவுடன் கூட்டு சேர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஓபிஎஸை எப்படி தலைவராக ஏற்று கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பியதுடன், முதல்வரை ஒருமையில் பேசினார்.. ஓபிஎஸையும் விமர்சித்திருந்தார்.
இவ்வாறு விமர்சிப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவையும் வெளிப்படுத்தியவாறே வருகிறார்.. அந்த வகையில் இன்றைய எடப்பாடிக்காக மண்சோறு சாப்பிட்டுள்ளார் வளர்மதி.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 69வயது பிறந்தநாள்.. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இந்த விழாவை பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.
மகளிரணி: அதன் ஒருபகுதியாக முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில், எடப்பாடி பழனிசாமி பூரண நலமுடன் இருக்க வேண்டுமென மகளிரணி நிர்வாகிகள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்... இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து மீண்டும் தமிழ்நாடு முதல்வராக வேண்டி முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அக்கட்சியினர் மண்சோறு சாப்பிட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் இப்படித்தான் மண் சோறு, தீச்சட்டி எடுத்திருந்தனர்.. இந்த பிரார்த்தனைகள் எல்லாம் அப்போது தமிழக மக்களால் உற்று கவனிக்கப்பட்டன.. இப்போது மறுபடியும் மண்சோறு பிரார்த்தனை நடத்த துவங்கி உள்ளனர் அதிமுகவின் மகளிர் அணியினர்..
தீச்சட்டி: "மறுபடியும் மண் சோறு, தீச்சட்டி என ஆரம்பித்துவிட்டார்களே" என்று இணையத்தில் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. ஆனால், அதிமுகவினோ, "இதெல்லாம் எங்கள் நம்பிக்கை, எடப்பாடி பழனிசாமி பூரண நலத்துடன் இருக்க வேண்டும், மறுபடியும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்பதற்காக இந்த பிரார்த்தனையை செய்துள்ளோம்.. எங்கள் நம்பிக்கையை, நம்பிக்கை இல்லாதவர்கள் கிண்டலடிக்கிறார்கள்" என்று பதிலடி தந்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications