நல்லப் பாம்பு, கண்ணாடி விரியன் கடித்தால் என்ன நடக்கும்? விஷ முறிவு மருந்து எப்படி வேலை செய்கிறது?
சென்னை: பாம்பு விஷத்திற்கு எதிராக கொடுக்கப்படும் மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் நல்லப்பாம்பு, கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: பாம்பு விஷத்துக்கு எதிராக கொடுக்கப்படும் மருந்து எப்படி வேலை செய்கிறது? என்பது கேள்வி. நல்லப் பாம்பு, கட்டுவிரியன் போன்ற பாம்புகள் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் நியூரோடாக்சின் வகை நஞ்சு உடையவை.

கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என அழைக்கப்படும் ரம்பச்செதிள் விரியன் போன்ற பாம்புகள் தசை, இரத்த சிவப்பணுக்கள், திசுக்கள் ஆகியனவற்றை அழிக்கக்கூடிய ஹிமோடாக்சீன் வகை நஞ்சு உடையவை. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
நல்லப் பாம்பு, கட்டுவிரியன் ஆகியவற்றின் நஞ்சு நமது இரத்தத்தில் கலந்தவுடன் நமது மூளையின் கட்டளைகளை கடத்தி எடுத்துச் செல்கின்ற நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். மூளையில் இருந்து வரும் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தக் கூடிய ஏற்பிகள் (Receiptors) நஞ்சின் விளைவுகளால் அடைபடுவதால் மூச்சுத்திணறல், அவயங்கள் செயலிழப்பு ஆகியன ஏற்படும். இறுதியில் இதயம் வலிப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுத்தும்.
நஞ்சு எதிர்ப்பு மருந்து (Antivenin) செலுத்தப்பட்டால் மூடியிருக்கும் கட்டளை ஏற்பிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.நஞ்சின் விளைவுகளை சமநிலைப்படுத்துகிறது.
கண்ணாடி விரியன், சுருட்டை போன்ற பாம்புகளின் நஞ்சு இரத்தத்தில் பரவும் போது இது உடல் திசுக்களை அழிக்கிறது.எனவே தீண்டப்பட்ட பகுதியில் வீக்கம், தசை அழுகல், வலி, சிறுநீரக செயலிழப்பு ஆகியன நேரிட்டு மரணம் ஏற்படுத்தும்.
நஞ்சு எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதும் இது பாதிக்கப்பட்ட திசுக்களை மீண்டும் சரி செய்து சமநிலையாக்குகிறது. இந்தியாவில் பெரிய நான்கு (Big Four) நச்சுப் பாம்புகளின் நஞ்சுகளின் கலவையில் மிக மிகச் சிறிய அளவு நஞ்சு குதிரைகளுக்கு செலுத்தப்படும். இது அதன் இரத்தத்தில் பிறபொருளெதிரிகள் (Antibodies) உருவாக்கியதும் இரத்தம் வடிகட்டப்படும்.
இரத்த பிளாஸ்மா இதிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்பட்டு நஞ்சுமுறி மருந்து தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஒவ்வொரு வகையான பாம்புக்கும் தனித்தனி நஞ்சுமுறி மருந்து உள்ளது. இந்தியாவில் பாம்பு தீண்டலுக்கு பொதுவான ஒரு நஞ்சுமுறி மருந்து பயன்படுத்துவதால் பரவலாக மருந்து இருப்பு வைத்து பயன்படுத்துவது இலகுவாக உள்ளது.
நஞ்சுமுறி மருந்து அயல் பொருளிலிருந்து தயாரிக்கப்படுவதால் நமது உடலில் இது செலுத்தப்பட்டதும் நஞ்சு முறிவு ஏற்படுவதுடன் பக்க விளைவாக (Side Effects) பல்வேறு வகையான ஒவ்வாமைகளை (Allergies) நமக்கு ஏற்படுத்தும். எனவே ஒவ்வாமைகளை இனம் கண்டு இதற்குரிய மருந்துகளும் உடனுக்குடன் செலுத்தப்படும்!
பாம்பு தீண்டலுக்கான நஞ்சு முறி மருந்து செலுத்தி ஒருவரை குணமாக்குவது என்பது சிக்கல்கள் நிறைந்த மருத்துவமாகும்! இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications