Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே பதிவெண்ணில் 4 ஆம்னி பஸ்கள்.. உளுந்தூர்பேட்டை செக்போஸ்ட்டில் ஆடிப்போன ஆர்டிஓ ஆபீசர்ஸ்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே பதிவு எண்ணில் 4 ஆம்னி பேருந்துகளை இயக்கியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இது தொடர்பான நடவடிக்கையை அதிகாரிகள் விரைந்து எடுத்துள்ளனர்.. என்ன நடந்தது? ஆம்னி பஸ்கள் சிக்கியது எப்படி?

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல், தனியார் ஆம்னி பஸ்களையும், பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

omni buses rto

கால நேரம் குறைவாகும் என்பதுடன், போதுமான வசதியும் இந்த ஆம்னி பஸ்களில் கிடைக்கும் என்பதால், ஆம்னிகளை பயணிகளால் தவிர்க்க முடிவதில்லை.. அதனால்தானோ என்னவோ, வார இறுதி விடுமுறைகள், விழா காலங்கள், பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே உள்ளன.

ஆம்னி பஸ்கள்: அதேபோல, தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்டு பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விதிமீறலால், தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது.. அதனால்தான், வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை, தமிழ்நாடு பதிவெண்ணாக மாற்ற வேண்டும் என்றும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளைத் தமிழ்நாட்டில் இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பதிவெண் விவகாரம்: ஆனாலும், அரசின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு ஆம்னி பேருந்துகள் பழைய பதிவெண்களிலேயே இயக்கப்படுகிறதாம். வெளிமாநில பதிவெண் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உள்ளூர் பதிவெண்களில், புது சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியிருக்கிறது. அதாவது, ஒரே பதிவெண்களில் 4 பஸ்களை ஆம்னி இயக்கியிருப்பதாக புகார் வெளிவந்துள்ளது.

மதுரையிலிருந்து, தனியார் சொகுசு பேருந்து ஒன்று, 23 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு பயணித்தது. சுரேஷ் என்பவர் இந்த பஸ்ஸை ஓட்டிச் சென்றார். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பஸ் நிறுத்தப்பட்டது.

பாஸ்ட்டேக்: அப்போது, அந்த பஸ்ஸில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்ட்டேக், இன்னொரு பஸ்ஸூக்கும் பயன்படுத்தப்பட்டதை கண்டு அங்கிருந்த ஊழியருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், உடனடியாக, பஸ்ஸை நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும், உளுந்தூர்பேட்டை போலீஸுக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்து, ஆம்னி பஸ்ஸில் வைத்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்பொழுதுதான் ஆம்னியின் மோசடி அம்பலமானது.

அம்பலம்: பரதன் ஏர் டிராவல்ஸ் என்ற அந்த பஸ், புதுச்சேரி பதிவெண் கொண்டது.. ஆனால், இன்னொரு பேருந்தின் பாஸ்டேக்கை தவறாக பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே பதிவு எண்ணில் 4 பஸ்களை மாற்றி மாற்றி ஓட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சாலை வரி கட்டாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரே பஸ்ஸின் ஆவணத்தை, 4 பஸ்களுக்கும் பயன்படுத்தியது உறுதியானது. போலி ஆவணங்களை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்து பல லட்சம் ரூபாயையும் மோசடி செய்திருக்கிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் ஆம்னி பேருந்தின் ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு, சொகுசு பேருந்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால், மதுரையிலிருந்து 900 ரூபாய் கொடுத்து சென்னைக்கு பயணம் செய்த பயணிகள், பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டதால் கொதிப்படைந்துவிட்டனர். அதுமட்டுமலலாமல், அந்த பயணிகளுக்கு தலா 200 ரூபாய் மட்டும் திருப்பி வழங்கப்பட்டதால், பயணிகள் இன்னும் ஆத்திரமடைந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

சர்ச்சை: ஒரே பதிவெண்ணில் 4 தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதுபோல் இன்னும் எத்தனை இடங்களில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது தெரியாததால், அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் ஆவணங்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கியிருக்கிறது.

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் சொல்லும்போது, "ஒரே பதிவெண்ணில் இயக்கிய 4 தனியார் சொகுசு பஸ் உரிமையாளர் புதுச்சேரியை சேர்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த உள்ளோம். அவர் மீது ஒரே பதிவெண்ணில் 4 பஸ்சுகளை இயக்கி, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+