ஆஹா ஓஹோனு புகழுறாங்களே! அப்படி என்னதான் இருக்கு மாதம்பட்டி ரங்கராஜின் சமையலில்? சுவை கூடுவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

கோவை: யாரை பார்த்தாலும் மாதம்பட்டி ரங்கராஜின் சமையலை ஆஹா ஓஹோ என புகழ்கிறார்கள், அந்த சுவைக்கு என்னதான் காரணம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம், மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் எனும் படத்தில் காதல் நாயகனாக நடித்திருப்பார். கோடி அருவி கொட்டுதே என்ற பாடல் மூலம் பிரபலமானவர். கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்தில் நடித்துள்ளார், கேசினோ படத்திலும் நடித்துள்ளார்.

Do you know How Madhampatty Rangaraj cooking was so good?

இவர் தற்போது சமையல் கலையில் சிறந்து விளங்குகிறார். தனது தந்தையுடன் சிறு வயது முதலே சமையல் வேலைக்கு போய் அவரது தந்தை பட்ட சில அவமானங்கள் இவரது மனதை காயப்படுத்தியதாகவும் அதனால் சமையல் தொழிலில் கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சமையல் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுத்தாராம்.

அந்த வகையில் கோவையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காலை, மதியம் என இரு வேளைகளுக்கு அதாவது 4000 பேருக்கு உணவு சமைத்து கொடுக்கிறார். இவருக்கு கீழ் 2000 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் அனிமேஷன் மற்றும் சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால் சமையல் பக்கம் வந்துவிட்டார்.

இவர் பெங்களூரில் ஹோட்டல் நடத்தினார். பிறகு, மாதம்பட்டிக்கே திரும்பி போய் கல்யாண நிகழ்ச்சிகளுக்கு உணவு ஆர்டர் எடுத்து செய்யத் தொடங்கினார். இவரது உணவில் தரம் இருந்ததால் சினிமா ஷூட்டிங்கிற்கும் சமைத்து கொடுத்தார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி, இயக்குநர் ராஜமௌலி வீட்டு திருமணம், விக்ரம் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் போன்றவைகளுக்கு அறுசுவை உணவை படைத்துள்ளார்.

வெளிநாடுகளுக்கும் உணவு சேவையை வழங்குகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என யார் வீட்டில் விசேஷங்கள் என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங்கைத்தான் எதிர்பார்க்கிறார்களாம். அப்படிப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமையலில் புதுமையை புகுத்துவதும் அவருடைய பேனருக்கு நல்ல பெயர் கிடைத்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

அது போல் சமையல் எப்படி வேண்டும் என்றாலும் யோசிக்காமல் செய்துடலாம் என மாதம்பட்டி ரங்கராஜ் சொல்வதே அங்கு பாசிட்டிவ் வைப்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள். அண்மையில் சித்த மருத்துவர் சிவராமனின் மகள் திருமணத்தில் சிறுதானியம், பாரம்பரிய நெல் வகைகளை வைத்தும் வெள்ளை சர்க்கரை, மைதா இல்லாமலும் சமைத்து அசத்தியிருந்தார்.

இதற்காக அவர் நிறைய மெனக்கெடல்களை செய்திருந்தார். உழைப்பு, அர்ப்பணிப்பு, அன்பு எல்லாவற்றை காட்டிலும் ஒரு சமையல் ருசியாக இருக்க காரணம் தண்ணீர் ஆகும். ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு தண்ணீரின் ருசி இருக்கும். அந்த வகையில் வடாற்காடு என்றால் பாலாறு, கோவை என்றால் சிறுவாணி, நெல்லை தாமிரபரணி, மதுரை என்றால் வைகை, திருச்சி என்றால் காவிரி என இருக்கிறது.

அந்த வகையில் மாதம்பட்டி ரங்கராஜ் எங்கு சமைக்க சென்றாலும் கூடவே லாரி லாரியாக சிறுவாணி தண்ணீரை கொண்டு செல்வாராம். அப்படித்தான் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்திருந்த சமயத்தில் டாக்டர் சிவராமனின் மகள் திருமணத்திற்கு ஒரு கன்டெய்னர் முழுக்க தண்ணீர் கொண்டு வந்தாராம். அது போல் இருட்டுக் கடை அல்வாவும் தாமிரபரணி ஆற்று தண்ணீரில் செய்வதால்தான் ருசி அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். எனவே மாதம்பட்டி ரங்கராஜின் சமையலுக்கு மிக முக்கிய தேவை சிறுவாணி ஆற்று தண்ணீர்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+