ஊருக்கு போறீங்களா.. அவ்ளோ பெரிய ரயிலுக்கு வெறும் 2 டிரைவர்கள்தானா? ரயிலில் ஏன் 2 டிரைவர்கள்? ஓஹோ பலே
சென்னை: ரயில் பயணங்களை மேற்கொள்பவர்களாக இருந்தால், ஒன்று கவனித்து பாருங்கள்.. ரயிலில் 2 டிரைவர்கள் மட்டுமே இருக்கிறார்களே ஏன் தெரியுமா?
ரயில்வே என்பது இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.. உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் இதுவும் ஒன்றாகும். இந்திய ரயில்வேயில் வருடத்துக்கு ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள்..

பணியாளர்கள்: வருடத்துக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது.. மொத்தம் 12.54 லட்சம் பணியாளர்கள் இந்த ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார்கள்.. அதனால்தான், இன்று வளர்ந்து வரும் இந்தியாவில், ரயில் சேவையின் அத்தியாவசியம் பெருகி கொண்டே வருகிறது.. அதனால்தான், ரயில்வே நிறுவனமும் புதுபுது சலுகைகளையும் அறிவித்து, பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரயில்களில் ஒவ்வொன்றிலும் 2 டிரைவர்கள்தான் இருப்பார்கள்.. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லக்கூடிய, ரயில் வெறும் டிரைவர்களா? என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
வாகனங்கள்: மற்ற வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு டிரைவர்கள் என்கிறோம்.. விமானத்தை இயக்குபவரை பைலட் என்கிறோம்.. அதுபோலவே. ரயிலை ஓட்டும் டிரைவர்களுக்கு "லோகோ பைலட்கள்" என்பார்கள்.. ஒவ்வொரு ரயிலிலும் 2 டிரைவர்கள் இருப்பார்கள்... இதில் ஒருவர் தலைமை லோகோ பைலட், இன்னொருவர் உதவி லோகோ பைலட் என்று அழைக்கப்படுகிறார்.
ஆனால், வெறும் இந்த 2 பேர் மட்டுமே ரயிலை முழுமையாக இயக்குவதில்லை... அப்படி தொடர்ந்து 2 பேர் மட்டுமே இயக்கி கொண்டிருந்தால் சோர்வு ஏற்பட்டுவிடும்.. அல்லது வேறு ஏதேனும் தவறு நடந்து விபத்துக்கு இட்டுச்செல்லலாம்.. எனவே, பயணத்தின் இடையில் வேறு ரயில் டிரைவர்கள் மாற்றப்படுவார்கள். இதனால், டிரைவர்கள், சோர்வடையாமல் ரயிலை பாதுகாப்பாகவும் திறமையாகவும் இயக்க முடியும்..
ஓவர் டைம்: எனவே, அனைவரையும்போல, ரயில் டிரைவர்களுக்கும் 8 மணி நேரம் டியூட்டிதான்.. ஆனால், இது தேவைக்கு ஏற்ப நேரம் மாறுபடும்.. சில சமயம் டிரைவர்களுக்குள் ஷிப்ட் டைமிங் இருக்குமாம்.. 4 மணி நேர ஷிப்ட் போலவே, சில நேரம் 9 மணிநேரம் ஷிப்ட் உண்டு.. அல்லது தேவைக்கேற்ப இதற்கு மேலேயும்கூட, கூடுதல் நேர வேலை உண்டு.. இப்படி கூடுதல் வேலை செய்தால், சம்பளமும் அதிகமாக வழங்கப்படும்.
அதேபோல, டிரைவரின் ஷிப்ட் முடிந்து விட்டாலும், அடுத்து நிர்ணயிக்கப்பட்ட ஸ்டேஷன் வரும் வரை அவர்கள்தான் ரயிலை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்.. இதற்கு தனியாக Over Time கணக்கிடப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications