பட்டென சொன்ன மின்சார வாரியம்.. உயரழுத்த மின் இணைப்பு தேவையா? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா? சூப்பர்
சென்னை: புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க போகிறீர்களா? உயரழுத்த மின் இணைப்பு குறித்து, மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது, புதிய மின் இணைப்புகளை வழங்குகிறது. ஆனால் புது மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால், 30 நாட்கள் வரை காலதாமதம் ஆவதாக புகார்கள் எழுந்தன.
அதனால்தான், புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு 7 நாட்களுக்குள் இணைப்பை வழங்க வேண்டும், அப்படி வழங்க முடியாவிட்டால், 10 நாட்களுக்கு பின்பான நாட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சமீபத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இதை பரிசீலித்த மின்வாரியமும், சில திருத்தத்தை கொண்டு வந்து, அதற்கான வரைவு அறிக்கையையும் கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தது.
புதிய இணைப்புகள்: நிரப்பப்படவில்லையானால், அடுத்த 3 நாளைக்குள், விண்ணப்பித்தவருக்கு விளக்கம் தரவேண்டும். நுகர்வோர்களுக்கு விண்ணப்பித்த 10 நாளைக்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும், ஒருவேளை மின் இணைப்பு வழங்க தாமதமாகுமானால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் விதம் நுகர்வோருக்கு மின்வாரியம் அபராதம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தது.
அதுமட்டுமல்ல, புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வைக்க வேண்டும் அல்லது புதிதாக மின் கட்டமைப்புகளை வேறு இடத்தில் இருந்து போஸ்ட் மரம் மூலம் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது என்றால் மட்டும். இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆன்லைன் விண்ணப்பம்: இப்படி ஏராளமான வசதிகளை பொதுமக்களின் நன்மைக்காக மின்வாரியம் செய்து வரும்நிலையில், உயர் அழுத்த மின்சாரத்தின் புதிய இணைப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அழுத்த மின்சாரத்தின் புதிய இணைப்புகள், கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு ஆகிய சேவைகளை பெற வேண்டுமானாலும் இணையதளம் மூலமே விண்ணப்பிக்கும் வசதியை அரசு செய்து தந்துள்ளது. இதுவரை, உயரழுத்த மின்சார இணைப்பு பெற வேண்டுமானால், மின்பகிர்மான வட்ட அலுவலகம் அதாவது கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் சென்று, விண்ணப்ப படிவம் பெற வேண்டும்... விண்ணப்பம் படிவம் - 4-ல் விண்ணப்பிக்க வேண்டும்..
பிறகு, விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் தந்து, மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறைகள் இருக்கின்றன. எனினும் தற்போது, உயரழுத்த மின் இணைப்புகளை பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகள்: உயரழுத்த மின் இணைப்புகளுக்கு http://htbill.tnebnet.org:8080/htbill/consumerLogin என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் விரைவாகவும், எளிதாகவும் விண்ணப்பிக்கலாம்.. அத்துடன், விண்ணப்பத்தின் நிலையையும் நம்மால் நேரடியாகவே கண்காணிக்க முடியும்.. அதுமட்டுமல்ல, வணிக நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்ப இணைப்புகள் வழங்கப்படும் என்றும் மின்வாரியம் கூறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications