சூப்பர் நியூஸ்.. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் பயன்கள்.. PMAYவில் மானியம் தேவையா.. அப்ப இதை படிங்க
சென்னை: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் PMAY என்ற திட்டத்தில், விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா? இந்த திட்டத்தின் மானியம் யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுதே இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் சாராம்சமாகும்.. பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது..

கிராமப்புற வீடுகள்: இந்த 9 வருடங்களில் இதுவரைக்கும் 3.04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகளை கிராமப்புற மக்களுக்காக கட்டித்தரப்பட்டுள்ளன..
இதில், 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருடையது என்பது மிக முக்கியமான அம்சமாகும். அதேபோல, 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு சொந்தமானதாகும்.. கடனை திருப்பி செலுத்தவும் 20 வருடங்களுக்கு அவகாசம் தரப்படுகிறது.. வட்டி விகிதமும் ரொம்பவும் குறைவு...
தகுதிகள்: வீட்டில் இருந்தபடியே மத்திய அரசு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் பலனை பெறுவதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா?
- 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாகவும், அதிகபட்சமாக 55 வயது வரை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
- பயனாளியில் கணவன், மனைவி, திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.
- ஒரு முறை பயன் பெற்ற பிறகு, இந்த திட்டத்தை மறுபடியும் பயன்படுத்த முடியாது
- இந்த திட்ட பலனை பெற வேண்டுமானால், இந்தியாவில் எங்கும் சம்பந்தப்பட்டவருக்கு கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது
- அதேபோல, வீடு வாங்குவதற்காக, எந்தவகையான மானியமும் அரசு சார்பில் எடுத்திருக்கக்கூடாது
- பயனாளிகள் குறைந்த வருமானம் கொண்ட குழு (LIG), பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS) அல்லது நடுத்தர வருவாய் குழு (MIG 1 அல்லது 2) வகையை சேர்ந்தவராக இருத்தல் அவசியம்.
தகுதிகள்: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ.1.5 லட்சமும், கடைசியாக அதாவது மூன்றாவது தவணையாக ரூ.50 ஆயிரமும் பெறப்படுகிறது. மேலும், சாதாரண வங்கிகளில் இருந்து கிடைக்கும் வீட்டுக் கடனை விட, கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.
18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே வீடு வாங்க அரசு மானியம் எதுவும் எடுத்திருக்கக் கூடாது. அதேபோல, பயனாளியில் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.
சக்ஸஸ்: இந்த திட்டம் பெருமளவு வெற்றிபெற்றதற்கு காரணம், வீடுகளை கட்டி வேகமாக முடிப்பது, சரியான நேரத்தில் ஒதுக்கீடுகளை தருவது, அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் நேரத்தில் நிதியை விடுவிப்பது இவையெல்லாம்தான் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
பிறகு, 'Citizen Assessment' என்ற ஆப்ஷன் இருக்கும்.. அதனுள் சென்றால், 'Online Application' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க, "In Situ Slum Redevelopment" ஆக்ஷனை தேர்வு செய்து, ஆதார் எண், பெயர் போன்றவற்றை சரியாக பூரித்தி செய்யவும்.
இப்போது Format A என்ற பக்கம் வரும். அதில், மாநிலத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர், நகரத்தின் பெயர், திட்டமிடல் பகுதி / மேம்பாட்டு பகுதி, குடும்பத் தலைவரின் பெயர், பாலினம், தந்தையின் பெயர், குடும்பத் தலைவரின் வயது, இப்போதைய முகவரி, தொடர்பு வருகை, நிரந்தர முகவரி போன்ற விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார் எண் கேட்கும்போது, அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு திரையில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சாவையும் பூர்த்தி செய்தால் போதும்.. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கான உங்கள் விண்ணப்பம் இப்போது சமர்பிக்கப்பட்டிருக்கும்.

தேவையான ஆவணங்கள் (மாத சம்பளம் பெறுவோருக்கு) : ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், நிரந்தர முகவரி விவரங்கள், கடந்த ஆறு மாதங்களின் வங்கி அறிக்கை, படிவம் 16/வருமான வரி மதிப்பீட்டு ஆணை, கட்டுமானம் பற்றிய தகவல்கள், கட்டுமான ஒப்பந்த விவரங்கள், அட்வான்ஸ் ரசீது போன்றவை தேவை.
அதேபோல, வாக்குமூலம் அதாவது, விண்ணப்பதாரருக்கு நாட்டில் எங்குமே நிரந்தர வீடு இல்லை என்ற வாக்குமூலம், ஹவுசிங் சொசைட்டி அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியிடம் NOC எடுக்க வேண்டியது அவசியம்.
பிறருக்கு தேவையான ஆவணங்கள்: அடையாள அட்டை (ஆதார் அட்டை, வோட்டர் ஐடி கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், படிவம் 16, வணிக விஷயத்தில் தேவையான ஆவணங்கள், கடந்த ஆறு மாதங்களின் வங்கி அறிக்கை, கட்டுமான திட்டம் விபரங்கள், அடவான்ஸ் பணம் செலுத்திய தகவல், சொத்து/ஒப்பந்தத்தின் ஒதுக்கீடு கடிதம், பிரமாணப் பத்திரம் (உங்களுக்கு இந்தியாவில் எங்கும் நிரந்தர வீடு இல்லை என்று அதில் எழுதப்பட்டுள்ளது)
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications