ஓய்வூதியதாரர்களே! வீட்டு வாசலிலேயே வாழ்நாள் சான்றிதழை பெறுவது எப்படி? இது இருந்தாதான் பென்ஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வாசலிலேயே தங்கள் உயிர் வாழ் சான்றிதழை பெற முடியும். இது எப்படி, இதற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். மேலும் இந்த உயிர் வாழ் சான்றிதழை கொடுத்தால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும் என்பதால் இது முக்கியமானது.

ஓய்வூதியதாரர்களுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கும் அவர் இறந்த பிறகு அவர் வாங்கிய ஓய்வூதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவருடைய மனைவிக்கும், அவரும் இறந்த பிறகு இந்த ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

pension post office

ஒரு வேளை திருமணம் செய்து கொள்ளாத பெண் இருந்தால் அவர்களுக்கு கிடைக்க விண்ணப்பிக்க வேண்டும். இது எல்லா துறைகளுக்கும் பொருந்துமா என தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் அவசியம் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஓய்வூதியதாரர் அல்லது அவருடைய மனைவியின் மரணத்திற்கு பிறகு அது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு சரியாக அறிவிக்காமல் அவர்களுடைய வாரிசுகள் யாரும் இந்த பென்ஷன் தொகையை முறைகேடாக அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.

மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எப்படி வாழ்நாள் சான்றிதழை பெற வேண்டும் என்பது குறித்து டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. அது போல் வாழ்நாள் சான்றிதழை வீட்டு வாசலுக்கே வந்து வழங்கும் ஏற்பாட்டை தபால் துறை செய்துள்ளது. இதற்காக இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியர்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

இதற்காக சேவை கட்டணமாக ரூ 70 தபால்தாரரிடம் செலுத்த வேண்டும். அது போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் சுயநிதி பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் வழியில் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், ஊக்கத் தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு அவசியமாகும்.

5ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு தபால் துறை கணக்கும், 6 முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்கு தபால் துறை வங்கிக் கணக்கும் தொடங்க தமிழக பள்ளிக் கல்வித் துறையுடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே பள்ளிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ கணக்குகளை தொடங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+