மனோ பாலா தமிழக முன்னாள் முதல்வரின் உறவினராமே.. இன்னொரு பிரபலமும் சொந்தமாம்! உங்களுக்கு தெரியுமா?
சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோ பாலா மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உறவினர் ஆவார்.
கோயமுத்தூரில் பிறந்த மனோபாலா சினிமா மீதிருந்த தீராத காதலால் சென்னை வந்து வாய்ப்புகளை தேடினார். அப்போது கமல்ஹாசன் பரிந்துரையின் பேரில் புதிய வார்ப்புகளில் நடிக்கவும் அவர் இளையராஜாவின் உதவி இயக்குநராக சேரவும் வாய்ப்பு கிடைத்தது.

இதுவரை 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோபாலா, 36 படங்களை இயக்கியுள்ளார். அது போல் 16 சீரியல்களை தயாரித்துள்ளார். அவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது. காமெடி சென்ஸ் அவருக்கு அதிகம். சேது, பிதாமகன், ஊர்க்காவலன், காற்றின் மொழி, சக்ரா உள்ளிட்ட அவருடைய மறக்க முடியாத படங்களாகும்.
மனோபாலா நல்லா சமையல் செய்வார். அவர் வத்தக் குழம்பு மற்றும் உருளைக் கிழங்கு வறுவலை நன்றாக செய்வார் என தியாகு உள்ளிட்டோர் கூறுகிறார்கள். அது போல் நடிகை ஊர்வசிக்கு மிகவும் பிடித்தமான உணவு தான் செய்து கொடுக்கும் வத்தக் குழம்பு என மனோபாலாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் மனோபாலாவுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

எல்லோருடனும் நன்றாக பேசுவார். யாரிடமும் சண்டையிட மாட்டார், முக்கியமாக கோபப்படமாட்டார். மனோபாலா கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துவிட்டார். மயில்சாமி இறந்து இரு மாதங்களே ஆன நிலையில் தற்போது இன்னொரு நகைச்சுவையும் மறைந்துவிட்டதே என திரைபிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் ஒரு நகைச்சுவை இன்று அழ வைத்துவிட்டதே என வைரமுத்து ட்வீட் போட்டுள்ளார். இந்த நிலையில் அவர் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்து வந்தார். அனைவரிடமும் மரியாதையுடன் பழகுவார். லைட்மேனாக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பார். மனோபாலாவின் உடல் சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு அருகே உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனோபாலா குறித்து யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் மனோபாலா நினைவோ ஒரு பறவை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை எனக்கு கொடுத்திருந்தார். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகியின் உறவினர். அது மட்டுமல்லாமல் அவர் கர்நாடக இசை கலைஞர் பாபநாசம் சிவனின் உறவினருமாவார். இவ்வாறு பிஸ்மி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications