பிற மாநிலத்தவரும் தமிழ் கற்க வேண்டும்.. ஆளுநர் ரவி முன்பு அழுத்தமாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: பிற மொழி பேசுபவர்கள் தமிழை கற்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியது வைரலாகி வருகிறது.
மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்தநாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. காந்தி பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கவிதை போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஆளுநர் பேச்சு
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் காந்தியடிகளை நாம் மறந்து வருகிறோம். அவரை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது. காந்தியின் கொள்கை வழியில்தான் நம் நா்டின் வளர்ச்சி உள்ளது.. காந்தியை போல் வேறு யாரும் இந்த நாட்டை புரிந்து கொண்டது கிடையாது.

மக்களின் நாடித் துடிப்பு
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களின் நாடித் துடிப்புகளை அறிந்தவராக காந்தி இருந்தார். பன்முகம் கொண்ட இந்தியாவில் அனைவரும் காந்தியோடு ஒன்றுபடுவர். தமிழர், தமிழ் கலாச்சாரம், தமிழ்மொழி மீது பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர் காந்தி என ஆளுநர் ரவி புகழாரம் சூட்டினர்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில் எதிர்காலத்தில் ஒற்றுமையோடும் ஒருமைப்பாட்டோடும் விளங்கிட வேண்டும் என்றால், தமிழ் அல்லாத பிற மாநில மக்கள் அனைவரும் உலகின் தலைச்சிறந்த மொழியான தமிழ் மொழியை படிக்க வேண்டும் என காந்தியடிகள் சொல்லியுள்ளார் என மா சுப்பிரமணியன் பேசினார்.

அழுத்தமாக கூறிய மா சுப்பிரமணியன்
காந்தி சொல்லியதாக கூறியவற்றை மா சுப்பிரமணியன் இருமுறை உரக்கவும் அழுத்தமாகவும் சொன்னார். அதுவும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்பு தமிழை பிறமாநிலத்தவர்கள் கற்க வேண்டும் என்ற பேச்சை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் மொழிதான் இணைப்பு மொழி என ஏ.ஆர். ரஹ்மான், பா ரஞ்சித் உள்ளிட்டோர் அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்தது நினைவுக்கூரத்தக்கது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!












Click it and Unblock the Notifications