சென்னையின் பெரிய சிக்னல் எது தெரியுமா? தப்பிதவறி மேம்பாலத்தில் ஏறாவிட்டால் அவ்வளவு தான்!
சென்னை: சென்னை நகருக்குள் இருக்கும் சிக்னல்களில் எல்லாம் இப்போது பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இல்லை.. தாம்பரம் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சி மருத்துவமனை சிக்னலும், ஈச்சங்காடு ஜங்சனும் தென்சென்னை மக்களை கலங்க வைத்துள்ளது. அவ்வளவு எளிதாக இந்த சாலைகளை கடந்து சென்றுவிட முடியாது.
சென்னையை விட சென்னையின் புறநகர் பகுதிளான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவிட்டார பகுதிகளில் தான் வாகன நெரில் கடுமையாக உள்ளது. உதாரணத்திற்கு செல்வது என்றால், சோழிங்கநல்லூரில் உள்ள ஒருவர் ஈக்காட்டு தாங்கல் வர கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் கடுமையாக இருக்கும்..

இதேபோல் தாம்பரம் மற்றும் வேளச்சேரி இடையேயும் பயணம் எளிதாக இருக்காது. சென்னையில் ஓஎம்ஆர் சாலை, ரேடியல் சாலை, சோழிங்கநல்லூர் கீழ்கட்டளை சாலை, வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இத்தனைக்கும் ரேடியல் சாலை, வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை போன்றவை மிகப்பெரிய அகலம் உடையவை.. இங்கு மேம்பாலங்களும் இருக்கிறது. ஆனாலும் நெரிசல் குறையவே இல்லை..
காமாட்சி மருத்துவமனை சிக்னலை எடுத்தக் கொண்டால், பல்லாவரம் குரோம்பேட்டை தாம்பரம் செல்ல பலரும் ரேடியல் சாலையை பயன்படுத்துகிறார்கள். அலுவலகம் செல்ல ஓஎம்ஆர் சாலைக்கு போக பயன்படுத்துகிறார்கள்.. அந்த பக்கம் பள்ளிக்கரணை, மேடவாக்கம் செல்லவும், இந்த பக்கம் வேளச்சேரி கிண்டி, அடையாறு செல்லவும் முக்கியமான சந்திப்பாக காமாட்சி மருத்துவமனை சிக்னல் இருக்கிறது. காமாட்சி மருத்துவமனை சிக்னலில் 4 பக்கமும் வாகனம் கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் சிக்னலை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. இதற்கு மாற்றுத்தீர்வை உருவாக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கிறார்கள். காமாட்சி மருத்துவனை பகுதியில் உள்ள சாலையில யூடர்ன் அமைத்தால் போக்குவரத்து சிக்னல் பிரச்சனை கணிசமாக குறையும் என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறார்கள்..
இது ஒருபுறம் எனில், கீழ்க்கட்டளை ஈச்சங்காடு சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சாலையில் எந்த பக்கம் வாகனத்தை ஓட்டவும் 5 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள்.அந்த பகுதியில் சிக்னலே 5 நிமிடம் வரை இருப்பதாகவும் புலம்புகிறார்கள்..
மெட்ரோ பணிகள் காரணமாக மிகச்சிறிய அளவிலேயே சாலை உள்ளதால் கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் தாம்பரம் நோக்கி செல்பவர்கள் அங்கு தப்பிதவறி மேம்பாலத்தில் ஏறாமல் கீழே சென்றால், நெரிசலில் நீண்ட நேரம் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. சென்னையில் இதை விட பெரிய சிக்னல் இல்லை என்று அந்த வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள். அவ்வளவு நேரம் காத்திருக்கும் நிலை இருப்பதாக சொல்கிறார்கள்..
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications