கோட்டை கொத்தளத்தின் கொடி மரம் வரலாறு தெரியுமா? 1687ல் மரத்தில் 150 அடி! 1994ல் இரும்பில் 119 அடி!
சென்னை: சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கொடி மரம் பற்றிய வரலாறை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவர் முன்னெடுத்த தீவிர முயற்சியால், 1974 முதல் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றலாம் என்ற உரிமை பெறப்பட்டது. 1687-1692 வரை, சென்னை மாகாண ஆங்கிலேய ஆளுநராக இருந்த 'யேல்' என்பவரின் காலகட்டத்தில் 150 அடி மரத்திலான கொடி கம்பம் நிறுவப்பட்டது.

அந்த மரக் கொடிக்கம்பம் பழுதடைந்ததால், 1994ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 119 அடி உயர இரும்பிலான கொடி கம்பம் நிறுவப்பட்டது. அதனை நிறுவியது கட்டுமானத்திற்கு பெயர் பெற்ற எல் அண்ட் டி நிறுவனமாகும்.
கோட்டை கொத்தளத்தின் பீடத்திற்குமேல், கொடி கம்பம் 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. கொடி கம்பம் முதல் அடுக்கு, 69 அடி உயரம், 20 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது. கொடி கம்பம் இரண்டாம் அடுக்கு, 30 அடி உயரம், 12 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 5 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.
கொடி கம்பம் மூன்றாம் அடுக்கு, 20 அடி உயரம், 6 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சுதந்திரத் தினத்தை ஒட்டி தலைமைச் செயலகத்தில் "தேசிய கொடி கம்பம்" புதுப்பித்தல் பணி ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் கோட்டை கொத்தளத்தின் கூரை மராமத்துப்பணியும் தனியாக நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications