சென்னை ஜெயஸ்ரீ ஆடிய சதுரங்கவேட்டை.. கோடிகளை சுருட்டி பலே கேடித்தனம்.. வசமாக சிக்கிய வங்கி ஊழியர்
சென்னை: சென்னை சூளைமேட்டில் தனியார் வங்கியில் பணியாற்றிய பெண் ஊழியர், மூதாட்டியை ஏமாற்றி ரூ.2½ கோடியை சுருட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி, ரூ.2.65 கோடியை வாங்கிய முன்னாள் வங்கி ஊழியர்,. வெறும் 64 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே பணத்தை சுருட்டி இருக்கிறார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பூர்ணிமா நீத்து என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் பூர்ணிமா நீத்து கூறுகையில், என்னுடைய தாயார் சாந்தகுமாரிக்கு (வயது 66) ஜெயஸ்ரீ என்பவர் அறிமுகமானார். ஜெயஸ்ரீக்கு 39 வயதாகிறது. இவர் சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
என் அம்மா சாந்தகுமாரியிடம் ஜெயஸ்ரீ வந்து, தானும் தன் குடும்பத்தினரும் இணைந்து வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், அதில் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் ஆசை காட்டினார். இதை உண்மை என்று நம்பி எனது தாயாரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.2.65 கோடி ஜெயஸ்ரீயின் குடும்ப நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் லாப பங்கு தொகை என்று ரூ.64 லட்சத்தை எனது தாயாருக்கு ஜெயஸ்ரீ கொடுத்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு லாப பங்கு தொகை என்று எந்தவித தொகையும் கொடுக்கவில்லை. முதலில் முதலீடு செய்த ரூ.2.65 கோடியையும் முறையாக திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். மேலும் அவர் பார்த்த வங்கி வேலையையும் ஜெயஸ்ரீ விட்டுவிட்டார். ரூ.2.65 கோடியை மோசடி செய்த ஜெயஸ்ரீ மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து தரவேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்" இவ்வாறு பூர்ணிமா நீத்து தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி செய்ததற்காக முகாந்திரம் இருந்ததால்,. மோசடி புகாரின்பேரில், முன்னாள் வங்கி ஊழியர் ஜெயஸ்ரீயை கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications