ஆகஸ்ட் 20ல் மதுரையில் அதிமுக மாநாடு.. 10 லட்சம் பேருக்கு மெனு தயார்!.. என்னென்ன சாப்பாடு தெரியுமா?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல்முறையாக மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்பியதால் அதிமுகவுக்கு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ் பக்கம் கணிசமான பொதுக் குழு உறுப்பினர்களோ எம்எல்ஏக்களின் ஆதரவுகளோ இல்லாத நிலை உள்ளது. எனினும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் கூறி வருகிறார்.
இந்த நிலையில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தங்களது செல்வாக்கை நிரூபிக்க அவர் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அது போல் ஓபிஎஸ்ஸும் சுயேச்சை சின்னத்திலோ அல்லது அமமுகவுடன் கூட்டணி அமைத்தோ எடப்பாடியை விட தங்களுக்கே செல்வாக்கு அதிகம் என நிரூபிக்க முயலுவார் ஓபிஎஸ்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல்முறையாக மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதுரை மாநாட்டில் தொண்டர்கள் திரள வைக்க போகிறார்கள்.
தொண்டர்கள் குடும்பம் சகிதமாக மாநாட்டுக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து சுமார் 10 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை ரிங் ரோட்டில் உள்ள வலையன்குளம் பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு மைதானம் சுமார் 50 ஏக்கர் பரப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டு திடலில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மாநாட்டு திடலில் ஆங்காங்கே தொண்டர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 250 கவுன்ட்டர்கள் அமைத்து உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவுன்ட்டர்களிலும் 6 பேர் பணியமர்த்தப்பட்டு தொண்டர்களுக்கு உணவுகளை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என 3 வகையான சாதங்கள் தொண்டர்களுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3000 மூட்டை அரிசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சாப்பிடுவதற்காக ஏராளமான யூஸ் அன்ட் த்ரோ தட்டுகள், தணணீர் அருந்த வாட்டர் பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications