ரவி மோகன் - ஆர்த்தி ரவி ஒரு பக்கம்ன்னா.. குறுக்கே வந்த விஜய்.. இங்கே என்ன கட்டுரை போட்டியா நடக்குது
சென்னை: இங்கே என்ன கட்டுரை போட்டியா நடக்குது என்று சொல்லும் அளவிற்கு சமூக வலைத்தளங்களில் சினிமா துறையினர் இடையே பெரிய பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது. அது என்ன பிரச்சனை? வாங்க பார்க்கலாம்.
தெலுங்கு சினிமா உலகான டோலிவுட்டும் - இந்தி பாலிவுட்டும் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகிறது. யூ டியூபர் "ஆண்ட்ரு டேட்" ஒருவேளை இயக்குனராக மாறி இருந்தால்.. எப்படி படங்களை எடுப்பாரோ அப்படிப்பட்ட படங்களை எடுப்பவர் "ஆந்திரா டேட்" தெலுங்கு இயக்குனர் சந்தீப் வாங்கா ரெட்டி. இவர் எடுத்த அனிமல், அர்ஜுன் ரெட்டி இரண்டு படங்களும் போதை பொருள், துப்பாக்கி, பெண்களை கொடுமை செய்வது என்று பெண் அடிமைத்தனத்தை பற்றிய படங்கள்தான்.
இவருக்கு இதை தாண்டி கதை யோசிக்க முடியுமா என்பதே சந்தேகம். பெண்களை அடிப்பதுதான் காதல் என்றும் கூட "வாங்கா" ரெட்டி பேட்டிகளை கொடுத்து பலரிடம் "வாங்கி" கொட்டி இருக்கிறார். அந்த வாங்கா ரெட்டியின் படம்தான் ஸ்பிரிட். எப்போதும் ஸ்பிரிட்டை வைத்து படம் எடுக்கும் இவர்.. இந்த முறை ஸ்பிரிட் என்றே பெயர் வைத்து படம் எடுத்துள்ளார்.
பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. முதலில் எல்லாம் நன்றாக போக கடைசியில் தீபிகா படுகோன் படத்தில் இருந்து வெளியேறினார். டிரிப்டி டிம்ரி ஹீரோயினாக உள்ளே வந்தார். இதை எதிர்த்து சந்தீப் வாங்கா ரெட்டி எழுதிய செய்தி கட்டுரை ஒன்றில் தீபிகா கூடுதல் சேலரி கேட்டதாகவும், சில "bold" காட்சிகளில் நடிக்க மறுத்ததாகவும் கூறி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதற்கு பதிலடியாக தீபிகா தரப்பு எழுதிய கட்டுரையில் அதெல்லாம் பொய்.. சம்பளம் விவகாரம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறி இருந்தார். ஏனென்றால் தீபிகா பொதுவாகவே bold காட்சிகளில் நடிக்க யோசிக்க கூடியவர் அல்ல. பொதுவாக பெண்களை துச்சமாக பார்க்கும் வாங்காவிடம்.. "உங்க படத்தில் எல்லாம் நடிக்க முடியாது போங்கங்க" என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார் தீபிகா.

இப்போது தீபிகா பற்ற வைத்த தீ.. அனிமல் இயக்குனர் வாங்காவை அனிமல் போலவே கத்த வைத்து உள்ளது. இவரும் இவரின் பிஆர் டீமும் தீபிகாவுக்கு எதிராக பக்கம் பக்கமாக கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். தீபிகாவை கடுமையாக தாக்கி.. அவர் நடிகையே இல்லை என்றெல்லாம் கூறி தாக்கி கட்டுரைகளை பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு இருக்கின்றனர். எந்த சமூக வலைத்தளங்களுக்கு போனாலும் அங்கே வாங்காவின் காவிய கட்டுரைகள்தான் உள்ளன.
ஜெயம் ரவி மோகன் - ஆர்த்தி ரவி
சமீபத்தில்தான் ரவி மோகன் - ஆர்த்தி ரவி இதேபோல் கட்டுரைகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்து இருந்தார். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என்று நடிகர் ரவி கூறியுள்ளார், என்றார். நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில், மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கோரியுள்ளார் ஆர்த்தி. இரு மைனர் குழந்தைகளையும் ரவிமோகனே பராமரிக்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு பேருமே விவகாரத்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மாதம் 40 லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக மாறி மாறி இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கைகளை பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு இருந்தனர். சிலர் chatgptல் போட்டு அதற்கு சம்மரி கேட்கும் அளவிற்கு மக்களை சோம்பேறி ஆக்கி இருந்தனர் ரவி - ஆர்த்தி. ஒரு கட்டத்தில் கோர்ட்டே இதில் தலையிட்டு இரண்டு பேருமே மாறி மாறி இப்படி அறிக்கை வெளியிடுவது பேட்டி கொடுப்பதை வழக்கு முடியும் வரை தவிர்க்கவும் என்று உத்தரவிட்டனர்.
விஜய் அறிக்கை
ஒரு பக்கம் வாங்கா எழுதும் கட்டுரைகள்.. இன்னொரு பக்கம் ரவி - ஆர்த்தி எழுதும் கட்டுரைகள் என்று சோசியல் மீடியா பரபரப்பாக இருக்க.. இருங்க பாய் என்று முன்கூட்டியே அங்கே தடம் பதித்தவர்தான் நடிகர், அறிக்கைவாதி.. சாரி அரசியல்வாதி விஜய். சில நாட்களாக அறிக்கை வெளியிடாமல் இருந்த விஜய் மீண்டும்.. கடந்த 2 - 3 நாட்களாக ஸ்டாலின் டெல்லி பயணம், பொள்ளாச்சி வழக்கு தண்டனை, சென்னை தீ விபத்து என்று அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
பக்கம் பக்கமாக இவரும் கட்டுரைகளை எழுதி வெளியிடுகிறார். ஏஐ காலத்தில் வீடியோ கூட போடாமல் விஜய் முழுமையாக அறிக்கை பக்கமே ஐக்கியம் ஆகிவிட்டனர்... வாங்கா அறிக்கை.. ரவி அறிக்கை.. ஆர்த்தி அறிக்கை .. விஜய் அறிக்கை எல்லாம் பார்க்க.. இதென்ன சோஷியல் மீடியாவா இல்லை கட்டுரை போட்டியா என்றுதான் கேட்க தோன்றுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications