கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரம்மாண்ட குத்துவிளக்கு! என்னென்ன வசதிகள்? ஆல் அன்டர் ஒன் ரூஃப்!
செங்கல்பட்டு: கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தின் முகப்பில் பிரம்மாண்ட குத்துவிளக்கு தயார் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சென்னை புறநகர் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அனைத்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் அளவுக்கு நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட பேருந்துநிலையம் ரூ 400 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக பிரம்மாண்ட குத்து விளக்கு மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. இங்கு தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் இரு வழிகளை காவல் துறை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.
சிசிடிவி கேமராக்கள், முழுவதும் குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2285 பார்க்கிங் வசதிகள், 500 தனியார் பேருந்துகளை நிறுத்துமிடங்கள், உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அது போல் இந்த பேருந்து நிலையத்தை நிறைய மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர்தான்.
அது போல் விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையின் தென் புறநகர் பகுதியினர் பயனடைவர், மேலும் 2025 இல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது. கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.
கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஜிஎஸ்டி சாலை மட்டுமல்லாது வெளிப்புற வட்ட சாலை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் போக்குவரத்து அமைத்தால் முதலீட்டாளர்களுக்கு வசதியாக இருக்கும். இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
-
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications