பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்! மகளிரை மகிழ்வித்த அந்த சூப்பர் திட்டம்!
சென்னை: 2023- 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் போது தமிழக நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன?
தமிழக சட்டசபையில் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

அவர் எந்த மாதிரியான திட்டங்களை அறிவிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட்டில் இருந்த முக்கிய அம்சங்களை காண்போம்.
பிடிஆர் காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி வரை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை தொடங்கிய போது திருக்குறளையும் முடித்த போது சிலப்பதிகார பாடல் வரியையும் படித்து நிறைவு செய்திருந்தார். அவருடைய பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
இரு ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலையை நல்ல முன்னேற்றத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.
ரூ 20 கோடி செலவில் 10 சிறிய கைத்தறிப்பூங்காக்கள் நிறுவப்படும்.
பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் ரூ 485 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ 10 கோடி நிதி ஒதுக்கீடு
புதியதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இதனால் ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை 35 லட்சமாக உயரும்.
பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.
செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும். இதற்காக ரூ 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
வீடு கட்ட அரசு ஊழியர்களுக்கான கடன் ரூ 50 லட்சமாக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்
மாநகராட்சிகளில் இலவச இணைய சேவை வழங்கப்படும்.
பூந்தமல்லி- கோடம்பாக்கம் மெட்ரோ ரயில் 2025 இல் நடைமுறைப்படுத்தப்படும்.
மகளிரின் கட்டணமில்லா பயணத்திற்கு ரூ 2800 கோடி நிதியுதவி ஒதுக்கீடு
அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
கோவையில் ரூ 9000 கோடி செலவில் மெட்ரோ அமைக்கப்படும்.
மதுரையில் ரூ 8500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்
தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்
கட்டட வரைப்பட அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்.
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா
590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண பாஸ்
என்பன உள்ளிட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications