மளிகை, காய்கறிகளின் விலை விண்ணை முட்டுதே.. இன்றும் வரத்து குறைவால் கோயம்பேட்டில் எகிறிய தக்காளி விலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.. இதற்கான விலை நிலவரமும் வெளியாகி, இல்லத்தரசிகளை கலங்கடிக்க செய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை சில்லரை விற்பனை செய்யும் மளிகை கடைகளில் 110 -ஐ தாண்டி இருக்கும் நிலையில் மற்ற காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், மிகுந்த கவலைக்கும் உள்ளாகி வருகிறார்கள்.

Do you know what are the prices of these vegetables rise due to lack of supply in Koyambedu market

சின்ன வெங்காயம்: சமீப காலமாக, தக்காளி இல்லாமலேயே சாம்பார் வைத்து வருகிறார்கள். தக்காளி பழத்தை போன்று கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், சின்ன வெங்காயம் போன்ற பச்சை காய்கள் அனைத்தின் விலையும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு சாம்பார் வைக்க வேண்டும் என்றால் குறைந்தது 100 ரூபாய் செலவாகும் நிலைமை இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்துக்கு, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து முற்றிலுமாக குறைந்து போனதே காரணம் என்கிறார்கள் காய்கறி வியாபாரிகள். ஊட்டியில் இருந்து கேரட் மட்டுமே 70 சதவீதம் அளவுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் மட்டுமே போதுமான அளவுக்கும் வந்து கொண்டிருக்கிறதாம்.

மளிகை பொருட்கள்: மற்றபடி தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளின் அளவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம் மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. துவரம் பருப்பு தொடங்கி அனைத்து மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துவிட்டது.

ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150க்கும், இஞ்சி ரூ.280க்கும், பச்சை பட்டாணி ரூ.200க்கும் கத்தரிக்காய் ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.110க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளி 100க்கும் உருளைக்கிழங்கு 35க்கும் முள்ளங்கி 40க்கும் முட்டைகோஸ் 20க்கும் காராமணி 60க்கும், சவ்சவ் 25க்கும் புடலங்காய் 30, சுரக்காய் 35க்கும் வெண்டைக்காய் 50க்கும் முருங்கைக்காய் 30க்கும் சேனை கிழங்கு 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலிபிளவர்: அதேபோல, காலிபிளவர் 30க்கும் அவரைக்காய் 80க்கும் பீர்க்கங்காய் 50க்கும் நூக்கல் 35க்கும் கோவக்காய் 30க்கும் கொத்தவரங்காய் 40க்கும் விற்பனையானது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140ல் இருந்து ரூ.150க்கும், இஞ்சி ரூ.310க்கும், பீன்ஸ் ரூ.140க்கும், பட்டாணி ரூ.220க்கும், பச்சை மிளகாய் ரூ.110க்கும் வண்ண குடமிளகாய் ரூ.240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தவறான செய்தியை வியாபாரிகளிடம் சேர்ப்பதால் வரும் விளைவுகளே இந்த விலை உயர்வுக்கெல்லாம் காரணம் என்றும் கோயம்பேடு மார்க்கெட்டில், அனைத்து காய்கறிகளின் விலையை மார்க்கெட்டில் உள்ள சங்கத்தின் தலைவர்கள் மூலம் கேட்டு தெரிந்துகொண்டு, உண்மையான செய்தியை மக்களிடம் சேர்க்கவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

விழிபிதுங்கல்: எனினும், காய்கறிகளின் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதமோ அல்லது 2 மாதமோ ஆகலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருவதால், விழிபிதுங்கியிருக்கிறார்கள் இல்லத்தரசிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+