சென்னை- நெல்லையை விடுங்க.. தமிழகத்திற்கு மேலும் 5 வந்தே பாரத் ரயில்கள்.. டோட்டல் தென்னிந்தியா ஹேப்பி
சென்னை: தமிழகத்தில் இன்னும் எத்தனை வந்தே பாரத் ரயில்கள் வர போகிறது தெரியுமா.. முழு லிஸ்ட் இதோ!
வந்தே பாரத் ரயில்கள் உள்ளூரில் தயாரிக்கப்படும் அதிவேக ரயில்களாகும். இது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயங்கக் கூடியது. இது முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த ரயிலில் ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி உள்ளது. இந்த ரயிலில் பயணிப்பதன் மூலம் பயண நேரம் மிச்சமாகும். முதலில் வடமாநிலங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதாவது சென்னை- கோவை, சென்னை டூ மைசூர் ஆகிய 2 வந்தே பாரத் ரயில்களுக்கு மத்தியில் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்படுகிறது. தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ரயில் சேவை தாமதமாகிறது. அது போல் சிக்னல் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வந்தே பாரத் ரயிலின் வேகத்தை தண்டவாளங்கள் தாங்குமா என ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்த பிறகு சென்னை- நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க போகும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதன்பசி சென்னை சென்ட்ரல் டூ விஜயவாடா, பெங்களூர் டூ கோவை, சென்னை சென்ட்ரல் டூ செகந்திராபாத், சென்னை எழும்பூர் டூ கன்னியாகுமரி, திருப்பதி டூ சென்னை டூ புதுச்சேரி உள்ளிட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்னிந்தியாவிலும் மக்கள் எளிதாகவும் விரைவாகவும் சொகுசாகவும் பயணம் மேற்கொள்ளலாம்.

கோவை டூ பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் வந்தால் 5 மணி நேரம்தான் ஆகும். தற்போதைய சூழலில் கோவை டூ பெங்களூக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை செல்கிறது. ஆனால் வந்தே பாரத் இயக்கப்பட்டால் வெறும் 5 மணி நேரம்தான். தினமும் போய்ட்டு போய்ட்டு வரலாம். அந்த அளவிற்கு எளிதான பயணமாக இருக்கும்.
வந்தே பாரத் ரயில் கட்டணங்கள் என பார்த்தால் சென்னை- கோவைக்கு ரூ 1365 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது போல் சென்னை டூ மைசூருவுக்கு ஏசி பெட்டியில் ரூ 921 ரூபாயும் எக்ஸிகூட்டிவ் பெட்டியில் ரூ 1,880 வசூலிக்கப்படுகிறது. அது போல் கோவை டூ பெங்ளூருக்கு ஏசி பெட்டியில் ரூ 1300 ரூபாயும் எக்ஸிகூட்டிவ் பெட்டியில் 2,275 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அது போல் சென்னை டூ நெல்லை உத்தேசமாக ஏசி பெட்டியில் ரூ 1625 ம் எக்ஸிகூட்டிவ் பெட்டியில் ரூ 2815 ம் வசூலிக்கப்படும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications