வில்லங்கத்தில் வில்லிவாக்கம் பானு.. கண்டித்த கணவனின் கழுத்தை திருகி.. காட்டிக் கொடுத்த ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஷாஜிதா பானுவின் கணவர் கவுஷா பாஷாவுக்கு உடல் நிலை பாதிப்பு இருந்தது. இந்நிலையில் பலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் மனைவி, தனது கணவனை என்ன செய்தார் தெரியுமா? போலீசாரையே அதிர வைக்கும் அளவுக்கு திட்டமிட்டு சம்பவம் செய்திருக்கிறாராம் ஷாஜிதா பானு. என்ன நடந்தது என்பதை பற்றி பார்ப்போம்.

சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57-வது தெருவை சேர்ந்த 48 வயதாகும் கவுஷா பாஷா என்பவருடைய மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய், சர்க்கரை நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக அவரது மனைவி ஷாஜிதா பானு தெரிவித்தார்.

Chennai crime

ஆனால் உறவினர்களுக்கு இறப்பு குறித்து சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுஷா பாஷா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அண்மையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில் அவர் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரது மனைவி ஷாஜிதா பானுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாஜிதா பானு பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனிடையே அவருக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதை அவரது கணவரான கவுஷா பாஷா கண்டித்ததால் சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஷாஜிதா பானு உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இதை கொலை வழக்காக மாற்றியதுடன், கணவனை கொன்றதாக ஷாஜிதா பானுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இதேபோன்ற ஒரு சம்பவம் அண்மையில் கோவையில் நடந்துள்ளது.கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு விஷம் வைத்திருக்கிறார். அவர் உயிர் பிழைத்த ஆத்திரத்தில் அவரை பட்டப்பகலில் தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி, காதலனுடன் கைதாகி உள்ளார்.

கோவை வடவள்ளி அருகே காளப்பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்த 40 வயதாகும் பிரபு . லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். லாவண்யா தனது மாமியார் கலாவதியுடன் தள்ளுவண்டியில் டிபன்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரபுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்ற அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்திருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடையில் இருந்து லாவண்யா வீட்டிற்கு வந்தார். அப்போது பிரபு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அவர் மாமியாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பிரபுவின் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதன்படி, டிபன் கடைக்கு அருகே தனியார் கம்பெனி உள்ளது. இங்கு வேலை செய்யும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரே கவுடா (39) என்பவர் அடிக்கடி வந்து சாப்பிடுவார். அப்போது லாவண்யாவுக்கும், பைரே கவுடாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது.

தனிமை கிடைக்கும்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார்கள். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததும் கடுமையாக கண்டித்து டிபன் கடைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி முதலில் உணவில் விஷம் கலந்து கணவருக்கு கொடுத்தார். அதனை சாப்பிட்ட அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் உயிர்பிழைத்த கணவரை, தீர்த்துக்கட்டும் முடிவில் உறுதியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி, பிரபுவின் கழுத்தை டவலால் இறுக்கினார். அதிர்ச்சியடைந்த பிரபு கை, கால்களை உதைத்து சத்தம்போட்டுள்ளார்.. சத்தம் வருவதை அறிந்த லாவண்யா கணவரின் முகத்தை தலையணையால் அமுக்கிப்பிடித்துள்ளார். சிறிது நேரம் துடித்த பிரபு இறந்துபோனார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் விவாகரங்களில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+