பிரதான் மந்திரி முத்ரா யோஜனா.. லோன் வேணுமா? மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம் இருக்கே.. இதுதான் தகுதி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தேவைக்காகவும், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. இந்த திட்டங்கள் மூலம் கோடானுகோடி மக்கள் பலன்களையும் பெற்று வருகிறார்கள். மத்திய திட்டங்கள் அனைத்துமே மக்களிடம் வரவேற்பை பெறுகின்றன. அதில் முக்கியமானது, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டமாகும்.
முத்ரா திட்டம் என்று சுருக்கமாக சொல்வார்கள்.. தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு அரசு நிதியுதவியை வழங்கும்.. இதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை சாராம்சமாகும்.

பிரதமர் மோடி, கடந்த 2015, ஏப்ரல் 8ம் தேதி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.. இத்திட்டத்தின் கீழ், மக்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.. இந்த திட்டத்தில் 3 வகைகளில் மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.. இந்த 3 வகைகளிலுமே வேறுவேறு கடன் வசதிகள் இருக்கின்றன..
அதன்படி "சிஷு" (Shishu) என்ற திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரையிலும், "கிஷோர்" என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், "தருண்" என்ற திட்டத்தின்மூலம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.
முத்ரா திட்டத்தின் பயன்கள்: இந்த திட்டத்தில் கடன் பெறுவதன் மூலம், வேலைவாய்ப்பு நீங்குகிறது.. யார் வேண்டுமானாலும் தொழில்முனைவோராக உயரலாம்.. சிறு வணிகர்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.. தங்கள் தொழிலையும் விரிவுபடுத்தி கொள்ளலாம்.
கடனை பெறுவது எப்படி: வழக்கமாக ஒருவரிடம் கடன் வாங்குகிறோம் என்றால், அதற்கு ஆவணங்கள், அடமான பத்திரங்கள், உத்தரவாதங்கள் இப்படி தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த முத்ரா திட்டத்தில் அப்படி எந்த கண்டிஷனும் கிடையாது. விண்ணப்பதாரரின் பொதுவான தகவல்கள் தொடர்பான ஆவணங்களை மட்டுமே இதற்கு போதும். விண்ணப்பதாரரிடம் இருந்து திட்ட அறிக்கைகள், எதிர்கால வருமான கணிப்புகள் தொடர்பான ஆவணங்களை வங்கிகள் கேட்கலாம்.
வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன. முத்ரா கடனுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதம் இல்லை.. ஒவ்வொரு வங்கியும் அதன் சொந்த வட்டியை வசூலிக்கின்றன..
விண்ணப்பிப்பது எப்படி: மேற்கண்ட வங்கிகளிலேயே இதற்கான விண்ணப்பங்கள் இருக்கின்றன.. அந்த விண்ணப்பத்தை பெற்று, அடையாள சான்று, இருப்பிட சான்று, போட்டோ, இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.. முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்பட்டுவிடும்..
தகுதிகள்: விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலுக்கு இந்த திட்டத்தில் கடன் கிடைக்காது... அதேபோல, இந்தக் கடனுக்காக கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது.. புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்பான தொழில்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications