ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த துப்பாக்கியின் மாடல் என்ன? விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த துப்பாக்கியின் விலை எவ்வளவு தெரியுமா? அது எங்கிருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் அகில இந்திய அளவில் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருந்தாராம்.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஆதரவாளர்களுடன் இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் நிலை குலைந்து ஆம்ஸ்ட்ராங் கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 மணி நேரத்தில் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் காட்பாடியை சேர்ந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நேற்று சென்னை பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் அருகே உணவு டெலிவரி மேன் போல் உடையணிந்து வந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் அவரை வெட்டிவிட்டு தப்பியோடியது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பல ஆண்டுகளாக இரு்து வந்த ஆம்ஸ்ட்ராங் அரசியலிலும் பொது சேவையிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் பல பகுதிகளில் இவருக்கு பல்வேறு எதிரிகளும் உண்டு என்பதால் அவர் வெளியே எங்கு சென்றாலும் துப்பாக்கியுடன்தான் செல்வாராம். அது போல் ஆதரவாளர்கள் புடைச்சூழவும் அவர் சென்று வருவது வழக்கம். அவரிடம் இருந்தது அகில இந்திய அளவில் உரிமம் பெற்ற துப்பாக்கி.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி தேர்தலின் போது துப்பாக்கியை அனைவருமே காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அது போல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டதை அடுத்து அவர் தனது துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த துப்பாக்கியை அவர் ஜூன் 13 ஆம் தேதி திரும்ப பெற்றுக் கொண்டார். எனினும் நேற்றைய தினம் வீட்டருகே தானே என நினைத்து சென்ற நிலையில்தான் அவரிடம் துப்பாக்கி இல்லை என்பதை உறுதி செய்த கும்பல் அவரை வெட்டினர். இந்த நிலையில் துப்பாக்கி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த துப்பாக்கி ரூ 20 லட்சம் மதிப்பிலானது. தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தவுடன் இத்தாலியில் இருந்து Beretta Tomcat Inox 3032 என்ற மாடல் கைத்துப்பாக்கியை வாங்கினாராம். இது 400 கிராம் எடை கொண்டது. 9 ரவுண்டுகள் வரை சுட முடியும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications