மில்லியன் டாலர் கேள்விக்கு பதில்! சென்னைக்கு அருகே GLOBAL சிட்டி எங்கே வருகிறது தெரியுமா? ட்விஸ்ட்
சென்னை: சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் 'குளோபல் சிட்டி' திட்டம் எங்கே வரும்? என்ற கேள்விதான் தற்போது தமிழ்நாட்டில் மில்லியன் டாலர் கேள்வி. கடந்த வாரம் 2025-26 மாநில பட்ஜெட்டில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த பிறகு, சாமானியர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பலரும் எழுப்பிய மில்லியன் டாலர் கேள்வி இது.
சென்னையின் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையில் மும்பையின் நவி மும்பை அல்லது பெங்களூரின் ஒயிட்ஃபீல்டு போலவே புதிய நகரத்தை உருவாக்க தமிழக அரசு விரும்புகிறது. ஆனால், இவ்வளவு பெரிய நிலத்தை சென்னைக்கு அருகே கண்டுபிடிப்பதே சவாலாக இருக்கும். இத்திட்டத்திற்காக அரசு ஏராளமான நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கு அப்பால் செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூரில் இந்த க்ளோபல் சிட்டி அமைக்கப்பட வாய்ப்புகள் இருக்கலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருங்காட்டுக்கோட்டை, புல்லலூர், சூரை, தொடுகாடு, மேல்பாடி மற்றும் சோகண்டி ஆகிய பகுதிகளில் இந்த சிட்டி அமைக்கப்படலாம்.
பட்ஜெட் அறிவிப்பு
இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.. தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றும் விதமாக சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரம் அமைக்கப்படும். இதில் ஐடி பார்க்குகள், பன்னடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக தரமான வசதிகள் எல்லாம் இருக்கும் வகையில் இந்த சிட்டி அமைக்கப்பட உள்ளது.
சரியான இடம் குறித்து உறுதியாக இப்போது தெரிவிக்க முடியாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதிய நகரத்தில் ஐடி பூங்காக்கள், ஃபின்டெக் வர்த்தக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் மாநாட்டு அரங்குகள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை இடம்பெறும்.
குளோபல் சிட்டியில் உயர் வருமானம், நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கான பல அடுக்கு குடியிருப்பு கட்டிடங்கள், அத்துடன் விரிவான சாலை நெட்வொர்க்குகள் அமைக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் அமைப்புகள், கோ வொர்க்கிங் வேலை செய்யும் இடங்கள் மற்றும் நகர்ப்புற சதுக்கங்கள், நவீன உணவகங்கள், தனியான மதுபான கொள்கை, பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு உள்கட்டமைப்புகள் ஆகியவை அமைக்கப்படும். சென்னையுடன் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக, முறையான சாலை நெட்வொர்க்குகள், விரைவுப் பேருந்து சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே மிகவும் நவீனமான நகரமாக இந்த பகுதி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications