சென்னை புறநகர் பகுதியில் இதை எல்லாம் கவனிக்காமல் வீடு வாங்கினால்.. கடைசி வரை பட்டா வாங்கவே முடியாது
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியில் இதை எல்லாம் கவனிக்காமல் வீடு வாங்கினால்.. கடைசி வரை பட்டா வாங்கவே முடியாது.. அனாதீனம் நிலங்களுக்கு CMDA மற்றும் DTCP அங்கீகாரம் கண்டிப்பாக தரமாட்டார்கள். நிலங்களை தனி நபர் உரிமை கொண்டாட முடியாது. எனவே சென்னையில் அனாதீனம் என அரசு வகைப்படுத்தி இருந்தால் வாங்கிவிடாதீர்கள்.
சென்னைக்குள் அவ்வளவு எளிதில் வீடு வாங்கிவிட முடியாது. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகவும் வசதி படைத்தவர்கள் வீடு வாங்கலாம். ஓரளவு நல்ல வருமானம் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர்கள் சென்னைக்கு வெளியே தங்கள் வாழ்நாள் சேமிப்பை கொட்டி வீடு வாங்க முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளும் வாங்க முடியும். அப்படி வாங்கும் குடியிருப்புகளை கண்டிப்பாக கவனமாக வாங்க வேண்டும்.

ஆவணங்களை சரிபார்க்காமல் இந்தியாவிலேயே பிரபலமான நிறுவனங்கள் விற்கிறார்கள், தமிழ்நாட்டிலேயே பிரபலமான நிறுவனங்கள் விற்கிறார்கள் என்று நினைத்து வாங்கிவிடாதீர்கள். வங்கியில் எளிதாக கடன் தருகிறார்கள். யாரும் நம்ப முடியாத அளவிற்கு வசதிகள் தருகிறார்கள் என்று நினைத்து வாங்கிவிடாதீர்கள்.. அப்படி வாங்கினால் பட்டா வாங்க யாராலும் முடியாது.
நிலத்தில் வில்லங்கம் என்ற வார்த்தைக்கு பின் பல அர்த்தம் உள்ளது. நீதிமன்றத்தில் நிலத்தின் மீது வழக்கு உள்ளதா? அது எந்த மாதிரியான நிலம் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதை கிராம நிர்வாக அலுவலகத்தில் தான் போய் பார்க்க முடியும். உதாரணமாக அனாதீனம் நிலம் என்றால் கண்டிப்பாக வாங்க கூடாது.
அந்த கால கட்டத்தில் உள்ள மக்கள் 30 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தார்கள். ஆனால் நில உச்ச வரம்பு சட்டத்தின் அடிப்படையில் 30 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது என்று இருந்தது. 30 ஏக்கருக்கு மேல் யாராவது நிலம் வைத்திருந்தால் அது அரசாங்கத்திற்கு சேரும் என்று அறிவித்தனர். அப்படி அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்களை அனாதீனம் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோல அரசாங்கம் கைப்பற்றிய நிலங்களுக்கு பட்டா கிடையாது.
அதுமட்டுமில்லாமல் இந்த அனாதீனம் நிலங்கள் CMDA மற்றும் DTCP அங்கீகாரம் இல்லாத மனைகளாக இருக்கும். இதுபோன்ற நிலங்களை தனி நபர் உரிமை கொண்டாடவே முடியாது.நீங்கள் அரசாங்க நிலம் என்று தெரியாமல் அதை வாங்கிவிட்டால் அந்த நிலத்திற்கு பட்டா கிடைக்குமா என்றால் அது கிடைக்காது. அனாதீனம் நிலம் அரசாங்கத்தின் சொத்து என்பதால் அதற்கு பட்டாவே இருக்காது.
அதேபோல உங்களிடம் இருக்கும் நிலம் அனாதீனம் நிலமாக இருந்தால் அதை நீங்கள் வெளியில் யாரிடமும் விற்கவும் முடியாது. அதேபோல் நீங்கள் வைத்திருக்கும் நிலத்திற்கு பழைய பட்டா இருந்தாலும் அதை நீங்கள் விற்கவும் கூடாது. எனவே நீங்கள் நிலம் வாங்கும் போது அந்த நிலத்தை பற்றி முழுவதுமாக விசாரித்தே வாங்குங்கள். சென்னையை சுற்றி இதுபோன்ற நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களை வாங்கிய மக்கள் அவதிப்பட்டு கொதித்து போய் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
எனவே வங்கியில் கடன், பிரபலமான நிறுவனம், நல்ல சாலை, நல்ல இடம், சூப்பர் அடுக்குமாடி என எல்லாமே ஓகே என்றாலும், நிலத்தின் வகையை அறிந்து கொள்ளுங்கள். நிலத்தின் வகையை அறிய விஏஓ அலுவலகம் சென்றே அறிய முடியும். நிலத்தில் வில்லங்கத்தை அறிய வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நிலம் எந்த வகை என்பதை அறிந்து வாங்குங்கள். நிலம் சரியானது என்பது பற்றி தெரியாது என்றால், ரியல் எஸ்டேட் தொடர்பாக நன்கு அறிந்த நல்ல வழக்கறிஞரிடம் ஆவணங்களை கொடுத்து ஆய்வு செய்து வாங்குஙகள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications