"அது" வேற சிக்கிடுச்சு.. ஸ்பெஷல் கோச்சிங் நடத்திய "சபலிஸ்ட்".. தோண்ட தோண்ட ஆபாசம்.. கண்ணீர் பெண்கள்
சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரகாம் மீது மேலும் பல்வேறு பாலியல் புகார்கள் கிளம்பி உள்ளன
சென்னை: 2 நாட்களுக்கு முன்பு, பாலியல் வழக்கில் கைதாகி உள்ள ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது மேலும் பல புகார்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. இந்த 2 நாட்களில் ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில், போலீஸ் விசாரணைக்கு விரைவில் உட்படுத்தப்பட உள்ளார் 50 வயதான ஜான் ஆபிரகாம்.
சென்னை நந்தனத்தில் இயங்கி வருகிறது ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி.. தமிழ்நாட்டில் மிகவும் பழமையான கல்லூரியாகும்.. இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் விளையாட்டு பயிற்சி பெறுகின்றனர்.
பழமையானது, புகழ்பெற்றதும் என்பதால், மாணவிகள் தான் அதிகளவில் உள்ளனர்... இந்த கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்... இவரும் ஒரு விளையாட்டு வீரர் ஆவார்..

வீக்னஸ்
ஆசியா மற்றும் தேசிய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி என நிறைய பதக்கங்களை பெற்றவர்... இதைதவிர, ஆணழகன் போட்டியிலும் வெற்றி பெற்றவர்.. அடிப்படையிலேயே இவர் ஒரு விளையாட்டு வீரர் என்பதால், தான் முதல்வராக பொறுப்பேற்ற இந்த ஒய்எம்சிஏ-வில் ஏராளமான போட்டிகளில் மாணவ-மாணவிகளை பங்கேற்க செய்துள்ளார்.. இதற்கு முன்பு பணியாற்றியவர்களைவிட, இவர் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியின், முதல்வராக பணியாற்றிய காலத்தில்தான், மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறந்த நிர்வாகத்திறமை வாய்ந்தவர்.

சபலபுத்தி
இப்படி எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும், "சபலபுத்தி" இவரை ஆட்டிப்படைத்து வந்திருக்கிறது.. நாளடைவில், இந்த வீக்னஸ் அதிகமாகி கொண்டும் வந்திருக்கிறது.. எத்தனையோ மாணவிகளுக்கு ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் தொந்தரவு தந்தாலும், யாருமே இவருக்கு எதிராக புகார் கொடுக்க முன்வரவில்லை.. முதல்முறையாக கடந்த நவம்பர் மாதம்தான், 23 வயது மாணவி துணிச்சலாக புகார் தந்தார்.. நேரடியாகவே சைதாப்பேட்டை மகளிர் போலீசுக்கு போய்விட்டார்.. அந்தபுகாரின்பேரில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. ஆனாலும், போலீசார் கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், முன்கூட்டியே ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கி கொண்டார் ஜான் ஆபிரகாம்.

கோச்சிங் கிளாஸ்
இதனால், கொஞ்சநாள் காலேஜ் பக்கமே வராமல் இருந்த நிலையில், மறுபடியும் ரீ-என்ட்ரி தந்தார்.. அப்போதும் அவர் புத்தி மாறவில்லை.. இம்முறை, ஹாஸ்டல் மாணவிகள் மீது குறி வைத்தார்.. அங்கு தங்கியுள்ள மாணவிகளுக்கு, "ஸ்பெஷல் கோச்சிங்" என்ற பெயரில், அவரது லீலைகள் ஆரம்பமாயின.. இதற்காகவே, அழகான மற்றும் நல்ல உடல் அமைப்புள்ள மாணவிகளை தேர்வு செய்து, இந்த ஸ்பெஷல் கோச்சிங்குக்கு அழைத்து செல்வாராம்.. அப்படி ஒருமுறை 17 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல் ஆரம்பித்துள்ளார்... ஆரம்பத்தில் அந்த மாணவி இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இதுவே, முதல்வருக்கு தெம்பை தந்துவிடவும், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக தொந்தரவு செய்துள்ளார்.

அப்பட்ட வெளிச்சம்
அதற்கு பிறகு, அதிர்ச்சியடைந்த மாணவி சம்பவம் குறித்து ஒய்எம்சிஏ நிர்வாகத்திடம் புகார் தந்துள்ளார்.. அதுவும் ஆதாரத்துடன் அழுதபடியே புகார் தந்திருக்கிறார். இந்த புகாரின்பேரில், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகள் ஆய்வுசெய்யப்பட்டபோது, சம்பவத்தன்று ஜார்ஜ் ஆபிரகாம், சம்பவத்தன்று மாணவியை தனியாக உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து செல்வதும், பிறகு அந்த மாணவி அழுதபடி வெளியே வருவதும் அப்பட்டமாக அதில் பதிவாகி இருந்தது.. இதனால், மறுபடியும் சைதாப்பேட்டை மகளிர் போலீசில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரில்தான், போக்சோவில் ஜான் ஆபிரகாம் 2 நாள் முன்பு கைது செய்யப்பட்டார்..

ஆபாச மெசேஜ்கள்
இவர் கைதான செய்தி பரவியதுமே, இவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் ஒவ்வொருவராக புகார்களை தர துவங்கி உள்ளதுதான், தற்போது அதிர்ச்சியை கிளப்பி விட்டுள்ளது.. முன்னாள் மாணவிகளும், இப்போது படித்து வரும் மாணவிகளும் என 10க்கும் மேற்பட்டோர் இதுவரை ஜான் ஆபிரகாமுக்கு எதிராக புகார்களை தந்துள்ளனர்.. கல்லூரி நிர்வாகத்துக்கு இ-மெயில், லெட்டர் மூலமாக இந்த பாலியல் புகார்களை தந்துள்ளனர்.. மேலும் பலர், ஆபாசமாக வாட்ஸ் அப்களுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ்களை ஆதாரமாக தந்துள்ளனர்.. கல்லூரி நிர்வாகம், அதை போலீசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.. ஆனால், இந்த பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், யார் பெயரையும் வெளியிடாமல் போலீசார் ரகசியம் காத்து வருகிறார்கள்.. இந்த பாலியல் புகார்களின் எண்ணிக்கை இனியும் அதிகமாகும் என்கிறார்கள்..

ஸ்பெஷல் கோச்சிங்
நேஷனல் லெவலில் விளையாடி, சாதிக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ள மாணவிகள் யார் யார் என்பதை லிஸ்ட் எடுத்து கொள்வாராம்.. பிறகு, தேசிய மற்றும் ஆசியா போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்று தருவதாக சொல்லி, தேசிய விளையாட்டு துறையில் தனக்கு பல அதிகாரிகளை தெரியும் என்றெல்லாம் மாணவிகளிடம் அளந்து விடுவாராம்.. மேலும், அந்த அதிகாரிகளுடன் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்களையும் காட்டவும், மாணவிகள் அதையெல்லாம் பார்த்து நம்பியுள்ளனர்.. அதற்கு பிறகுதான் "ஸ்பெஷல் கோச்சிங்" ஆரம்பிப்பாராம் ஜான் ஆபிரகாம்..

சேட்டைகள்
சில சமயம், மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்கு வெளியூர் செல்ல நேரிடும்போது, ஸ்டார் ஹோட்டலுக்கு மாணவிகளை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு தந்திருக்கிறார்.. இதில் என்ன ஒரு கொடுமை என்றால், இதுவரை எந்த மாணவிகளுக்கும், தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்று தந்ததே கிடையாதாம்.. ஆனால், சிறந்த மாணவ, மாணவிகளை தேர்வு செய்யும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே இருக்கிறது என்பதால், இது ஒன்றை மட்டும் வைத்தே, எல்லா சேட்டைகளையும் செய்து வந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, இங்கு பயிற்சி முடித்துவிட்டு காலேஜ்ஜில் இருந்து சென்ற பல முன்னாள் மாணவிகளுக்கும் இதே பாலியல் தொல்லை தொடர்ந்து வந்துள்ளது..

ஆபாச நெடி
மேலும், பெரிய பெரிய ஸ்கூல்களில், காலேஜ்களில், கல்லூரிகளில் உடற் பயிற்சி ஆசிரியர் பணி வாங்கி தருவதாக சொல்லி, அவர்களுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார்.. இதையெல்லாம் வீடியோ, போட்டோக்களாக எடுத்து வைத்து கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி மிரட்டி மறுபடியும் பாலியல் தொந்தரவு தந்துவந்தாக சொல்கிறது போலீஸ் தரப்பு. ஜார்ஜ் ஆபிரகாம் மீதான புகார்களுக்கு பல ஆதாரங்கள் அவரது செல்போனிலேயே சிக்கியுள்ளதாம்.. எனினும், சில ஆபாச வீடியோக்களை அவர் அழித்திருக்கிறார்.. அதனால், அவர் செல்போனை தடயவியல் துறைக்கு அனுப்ப முடிவு போலீசார் முடிவு செய்துள்ளார்களாம்..

தூண்டில் மீன்கள்
அதேபோல, இந்த 2 நாளில் ஏகப்பட்ட புகார்கள் குவிந்துவிட்டதால், அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்.. இந்த விசாரணையின்போதுதான், ஆபிரகாம் இதுவரை எத்தனை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார் என்பது முதல், மாணவிகள் அளித்த புகார்களின் உறுதித்தன்மை குறித்தெல்லாம் தெரியவரும் என்கிறார்கள்.. 50 வயதான கல்லூரி முதல்வரின் பாலியல் அட்டூழியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து, சென்னையை அதிர வைத்து கொண்டிருக்கிறது..!!!

பூதம் கிளம்பியது
இப்படித்தான், ஒரு மாணவியை மாலை நேரத்தில் ஜிம்முக்கு தனியாக வரச்செய்து, அந்த மாணவிக்கு உடற்பயிற்சி என சொல்லி க்ரஞ்ச் எக்ஸர்ஸைஸ், லெக் எக்ஸர்சைஸ் என்ற பெயரில் தொல்லை தந்தாராம் இந்த முதல்வர்.. இதைதவிர நைட் நேரத்தில் போன் செய்து, உடற்பயிற்சி டிப்ஸ் தருவதாக சொல்லி ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார்.. கல்லூரி நிர்வாக குழு இப்படி அளித்த புகார்களின் அடிப்படையில் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பயிற்சிக்கு வந்த மாணவிகளில் எத்தனை பேருக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்? எத்தனை ஆண்டுகாலமாக மாணவிகளிடம் இவ்வாறு முறைகேடாக ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறித்து சைதாப்பேட்டை மகளிர் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்..!!
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications