கணவனின் பெண்கள் லிஸ்ட்.. இரவெல்லாம் அழுத மனைவி.. அந்த செல்போனை பார்த்தால்? ஆடிப்போன சென்னை காசிமேடு
சென்னை: இளம்பெண் எடுத்த முடிவை கண்டு, சென்னைவாசிகள் அதிர்ந்துபோயுள்ளனர்.. பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகார் தொடர்பாக காசிமேடு போலீசாரும் தீவிரமான விசாரணையை முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது?
சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவீனா.. 30 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் நம்பிராஜன்.. திருமணம் நடந்து 7 வருடங்களாகிறது.. இருவருமே ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு தற்போது 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

சந்தேகம்: திருமணமாகி சில வருடங்கள் தம்பதி இருவருமே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.. ஆனால், கடந்த சில மாதங்களாகவே நம்பிராஜன் நடத்தையில் திடீர் மாற்றம் தென்பட்டது. இதனால், சந்தேகமடைந்த நவீனா, ஒருநாள், கணவரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.. அதில் சோதனை செய்தபோது, பல பெண்களுடன் நம்பிராஜனுக்கு தொடர்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதுமட்டுமல்ல, தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி பெண்களிடம் பழகி வந்துள்ளார்.. மேலும் சிலரிடம் தமக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும் சொல்லியிருக்கிறார்..
தகாத உறவு: இப்படி பல பெண்களிடம் தகாத தொடர்பில் இருப்பதை கண்டறிந்ததுமே, நவீனாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. எனவே, இதுகுறித்து கணவரிடமே நேரடியாக கேட்டுள்ளார். அப்போதிருந்தே நவீனாவிற்கும் நம்பிராஜனுக்கும் தகராறு வெடித்துள்ளது. நம்பிராஜனும் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்த சண்டை முற்றிவிட்டது. இதில், தன்னை கேள்வி கேட்பதால் ஆத்திரமடைந்த நம்பிராஜன், நவீனாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.. இதில் மனமுடைந்த நவீனா, இரவெல்லாம் அழுதுகொண்டேயிருந்தார்.. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார்..
ஆர்டிஓ : தன்னுடைய புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. நவீனாவின் சடலத்தை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கலங்கடித்துவிட்டது.. பின்னர் தங்கள் மகள் மரணம் குறித்து, காசிமேடு போலீசில் பெற்றோர் புகார் தந்ததையடுத்து, விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.. ஆனால், நவீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் இன்னும் முடிவடையாததால், தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணையும் இதில் நடத்தப்பட்டு வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications