Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிஸ்டர் திருமா".. இதான் காரணமா.. விசிகவிடம் வந்த காயத்ரி.. "அக்கா"வை வாழ்த்தும் சிறுத்தைகள்.. சபாஷ்

திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்தது தொடர்பாக 2 விதமான காரணங்கள் அலசப்பட்டு வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்ற கூற்று அடிக்கடி நிரூபணமாகி கொண்டே வருவதுடன், திருமாவளவன் - காயத்ரி சந்திப்பு குறித்து, விசிக தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கடந்த காலங்களில் விசிகவை அதிகம் விமர்சித்தவர்களில் காயத்ரி ரகுராமும் ஒருவர்.. பாஜகவில் உறுப்பினரானது முதலே விசிகவை விமர்சித்தும், ட்விட்களை போட்டு பரபரப்பை கிளப்பியும் கொண்டிருந்த நிலையில், கட்சியில் புதிய பொறுப்பு தரப்பட்டு விடவும், அவரது பேச்சின் காரம் சற்று கூடியது.

ஒருமுறை திருமாவை ஜோக்கர் என்றார்.. பிறகு கறுப்பர் கூட்டம் குறித்த விவகாரத்தில் வரிந்து கட்டிக் கொண்டு வந்து திருமாவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டிருந்தார்.

 மிஸ்டர் திருமா

மிஸ்டர் திருமா

அதில், "என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்திருக்கீங்களா? இல்ல பால் காவடி எடுத்துருக்கீங்களா?. கடந்த வருஷமே உங்களை நேருக்கு நேர் விவாதத்துக்கு கூப்பிட்டேன், ஆனால் நீங்க வரல" என்பது உட்பட இன்னும் பல்வேறு தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்திருந்தார்.. "என்ன மிஸ்டர் திருமாவளவன் என்று காயத்ரி பேசும்போதே, சிறுத்தைகள் அன்று கொந்தளித்தனர்.. "காயத்ரியை கண்டிக்க ஆள் இல்லை.. திருமாவளவன் வயசு என்ன, காயத்ரியின் வயசு என்ன? அவர் அரசியல் அனுபவம் என்ன? இவர் அனுபவம் என்ன? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதையாவது வாய்க்கு வந்தபடி பேசுவதா?" என்று கொந்தளித்திருந்தனர்.

 டாக்டர் ஷர்மிளா

டாக்டர் ஷர்மிளா

சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடிகளை காயத்ரி எதிர்கொள்ளும் நிலை வந்தபிறகுதான், மற்ற கட்சிகள் மீதான கவனம் குவிய ஆரம்பித்தது. 2 மாதங்களுக்கு முன்பு, விசிக ஆதரவாளரான டாக்டர் ஷர்மிளா, நம்முடைய 'ஒன் இந்தியா தமிழுக்கு' பேட்டி தந்திருந்தார். அப்போது, அண்ணாமலை மீது காயத்ரி வீசியிருந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் நாம் கேள்வி எழுப்பியிருந்தோம்.. அதற்கு ஷர்மிளா, "பாஜகவில் அன்று கலிவரதன் விவகாரம் நடந்தபோது, பாலியல் புகாரை தந்து ஒரு பெண் கதறி கதறி அழுதாரே, அதுக்கெல்லாம் காயத்ரி ஏதாவது கேட்டாரா? கேடி ராகவன் வீடியோ வெளிவந்தபோது, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, காயத்ரி எதுவுமே பேசவில்லையே..

 ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

ஒருவேளை, காயத்ரிக்கு, தன் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்திருந்தால், இதே டெய்ஸி ஆடியோவுக்கு ரியாக்ட் செய்திருப்பாரா என்று தெரியாது.. நிச்சயம் டெய்ஸி விவகாரத்தையும் கடந்து தான் சென்றிருப்பார்.. இன்னைக்கு தனக்கு ஒரு பிரச்சனை என்றதும், பெண்ணுக்காக சப்போர்ட் செய்வதாக காட்டிக் கொள்ள குரல் எழுப்புகிறார்.. உண்மையிலேயே காயத்ரி, பெண்களுக்கு பாதுகாப்பை விரும்புபவராக இருந்தால், அல்லது பெண்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பவராக இருந்திருந்தால், எச். ராஜா, என்னைக்கு கனிமொழியை பேசினாரோ, அன்னைக்கு காயத்ரி குரல் கொடுத்திருக்க வேண்டும்..

 கனிமொழி எம்பி

கனிமொழி எம்பி

எச்.ராஜா, கனிமொழியை எவ்வளவு தரக்குறைவாக பேசினார்.. இதே குஷ்புவையும் அன்று தரக்குறைவாக பேசினாரே.. அப்போது குஷ்பு காங்கிரஸில் இருந்தார்.. அப்போவெல்லாம் காயத்ரி ஏன் வாய் திறக்கவில்லை.. பிஸ்கிஸ் பானுவை பலாத்காரம் செய்தவர்களை மாலை போட்டு வரவேற்று வெளியே அனுப்பினார்களே, அப்போவெல்லாம் காயத்ரி வாய் திறக்கலையே.. அப்படின்னா, உங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் கோபப்படுவீங்க.. கொந்தளிப்பீங்களா? அதனால், காயத்ரியின் விவகாரம் சுயநலமாகவே, எனக்கு தோன்றுகிறது" என்று ஷர்மிளா நம்மிடம் ஆவேசமாக கூறியிருந்ததை நினைவுகூரவேண்டி உள்ளது.

 கரையும் கசப்புகள்

கரையும் கசப்புகள்

எனினும், இதெல்லாம் பழைய கதை என்றாலும், திருமாவளவனை நேற்றைய தினம் காயத்ரி சந்தித்திருந்தது, அனைத்துவிதமான கசப்புகளை நொறுக்கி தள்ளிவிட்டு, மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. அதாவது, சக்தி யாத்திரை என்ற பெயரில் காயத்ரி ஒரு யாத்திரை பயணத்தை துவங்கி உள்ளார்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக கடந்த மாதம் 27ம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சக்தி யாத்திரை செல்ல முடிவு செய்திருந்தார்... ஆனால், இடைத்தேர்தல் திடீரென அறிவிக்கப்படவும், யாத்திரையை ஏப்ரல் 14ம் தேதிக்கு மாற்றியிருக்கிறார்..

 சரவெடி காயத்ரி

சரவெடி காயத்ரி

ஏப்ரல் 14 தமிழ்வருடப்பிறப்பு என்பதையும் தாண்டி, சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளாகும்.. இந்த அடிப்படையில்தான், தன்னுடைய யாத்திரையில் பங்கேற்க வர வேண்டும் என்று திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் சந்திப்பாக இது பார்க்கப்பட்டு வருகிறது. மற்றொருபக்கம் கட்சிக்குள் இணைவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. காயத்ரி ரகுராம் பிரச்சனை பாஜகவில் வெடித்ததுமே, வேறு கட்சிக்கு காயத்ரி தாவக்கூடும் என்று தகவல்கள் பரபரத்தன.. அப்படியானால், காயத்ரி எந்த கட்சிக்கு தாவக்கூடும் என்ற அலசல்களும் நடந்தன.. அப்போது, காங்கிரஸ் தரப்பு காயத்ரிக்கு ஆதரவு வலையை வீசியுள்ளதாக கூறப்பட்டது..

 நொந்து போய் சான்ஸ்

நொந்து போய் சான்ஸ்

தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தவும், நடந்ததை எடுத்து சொல்லவும், மேலிட தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கேட்டும், கடைசிவரை அந்த சான்ஸ் கிடைக்காத விரக்தியில் நொந்து போயிருந்த காயத்ரிக்கு, கதர் கட்சியானது ஆதரவு வலையை வீசியிருப்பதாக சலசலக்கப்பட்டன.. ஆனால், அதுகுறித்த செய்திகள் எதுவும் அதற்கு பிறகு வெளியாகவேயில்லை.. தற்போது திருமாவளவனை சந்தித்திருக்கும் நிலையில், விசிகவில் இணைவதற்கான சந்திப்பாக இது இருக்கலாம் என்கிறார்கள். திருமாவளவனே இதுகுறித்து 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்..

 சக்தியாத்ரா

சக்தியாத்ரா

அதில், அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரி ரகுராம் அவர்களுக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன். கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராம் அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்-14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்கவிருக்கும் சக்தியாத்ரா வெற்றிபெற வாழ்த்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.

 பூக்கள் தோழர்

பூக்கள் தோழர்

திருமாவளவனின் இந்த ட்வீட்களை சிறுத்தைகள் பலரும் திரண்டு வரவேற்றுள்ளனர்.. "வலதுசாரி சிந்தனையாளர்களைம் சனநாயகப்படுத்தும் மேலான பொறுப்பு நமக்குள்ளது தோழர்.. அந்த வகையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது... 'என் மீது கற்களை வீசுகின்ற தோழர்கள் ஒரு நாள் பூக்களை தூவுவார்கள்' என்று சொன்ன எழுச்சித்தமிழர் அவர்களின் வார்த்தை இன்று உண்மையானது நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் பொழுது எதிரியும் நம்மை நேசிப்பான்.

அக்கா

அக்கா

அரசியல் ரீதியாக எவ்வளவு கடுமையாக விமர்சித்து பேசி இருந்தாலும் தற்போதய அவரது நிலையில் இந்த சந்திப்பானது காயத்ரி ரகுராம் அக்காவிற்கு ஆறுதலாக அமையும் என்றும், நல்ல இயக்கத்தில் இணைந்து தன் பொது வாழ்வை தொடர வேண்டும்" என்று பதிவிட்டு வருகிறார்கள்.. காயத்ரியை "அக்கா" என்று அழைத்து, சிறுத்தைகளே, மனமுவந்து வாழ்த்துக்களை சொல்லி உள்ளது, நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.. ஒருவேளை காயத்ரியை விசிக பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில், அது பாஜகவுக்கு ஒரு மைனஸாகவே அமையக்கூடும் என்றே தெரிகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!

ஞாபகம் இருக்கா

ஞாபகம் இருக்கா

இதற்கு முன்பு, காங்கிரஸை போலவே, திமுகவில் காயத்ரி இணைய போவதாகவும் செய்திகள் வந்தன.. இப்படி காங்கிரஸில் சேரப்போவதாக வந்த தகவலின்போதும்சரி, திமுகவில் இணைய போவதாக வந்த தகவலின்போதும்சரி, காயத்ரி எதற்குமே ரியாக்ட் செய்யாமல் இருந்தார்.. ஆனால், இப்போது அழையா விருந்தாளியாக சென்று திருமாவளவனை சந்தித்ததுதான் பிற கட்சிகளுக்கு வியப்பை தந்து வருகிறதாம்.. அதேபோல, "பாஜகவினரை ஒருபோதும் கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன்" என்று ஒருமுறை திருமாவளவனே சொல்லியிருந்த நிலையில், இப்போது காயத்ரியை சந்தித்து வாழ்த்து சொல்லியதுடன், அரசியல் நாகரீகத்தையும் நிலைநாட்டியது குறித்து புல்லரித்து சொல்கிறார்கள் சிறுத்தைகள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+