கரண்ட் கம்பத்தை பார்த்துமே.. நாய் ஏன் காலை தூக்குது தெரியுமா?.. அட இப்படி ஒரு மேட்டர் இருக்கா
சென்னை: நாய்கள் மின் கம்பம், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பதை பார்த்திருக்கிறீர்கள், அது ஏன் என தெரியுமா?
ஓர் அறிவு முதல் 6 அறிவு வரை உயிர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் 5 அறிவு ஜீவனுக்கும் 6 அறிவு ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம் பெரும்பாலும் சிந்திக்கும் திறன், வாய் பேசுதல் என்பதைத்தான் சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் 5 அறிவு ஜீவராசிகளுக்கும் பாசம், நேசம், நட்பு, பகை என இருக்கின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நாய்களை சொல்லலாம். இவை பாசத்தை அதிக அளவில் வெளிப்படுத்தும். வளர்ப்பு நாயாக இருந்தாலும் தெரு நாய்களாக இருந்தாலும் உப்பிட்டவரை மறக்காதவைகளாக உள்ளன.
நன்றிக்கு எடுத்துக்காட்டாக நாய்களைத்தான் சொல்வார்கள். அந்த வகையில் நாய்கள் செய்யும் சில வித்தியாசமான பழக்கங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் அது எதற்காக என ஆராய்ந்ததில்லை. அந்த வகையில் நாய்கள் மின்சார கம்பிகள், கார் டயர்களில் சிறுநீர் கழிக்கும்.
ஆனால் இது ஏன் என பலருக்கு தெரியாது. எத்தனையோ இடங்கள் இருந்தாலும் அவை அந்த இடங்களைத்தான் தேடி போய் சிறுநீர் கழிக்கும். இது நாய்களின் பழக்கம். வீடுகளில் கூட வெளியே வாக்கிங் அழைத்து செல்லும் போது இந்த நாய்கள் வீட்டு வாசலில் கூட சிறுநீர் கழித்துவிட்டு வரும்.
இது பகைக்காகவும் நட்புக்காகவும் என்றும் கூறுகிறார்கள். அதாவது கார் டயர்கள், மின் கம்பங்களில் சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏய் இது என் ஏரியா, உள்ள வராதே என மற்ற நாய்களுக்கு எச்சரிக்கும் விதத்திலும் எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் மற்ற நாய்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த சிறுநீர் வாசனையை வைத்து இங்கு நமக்கு நண்பனோ எதிரியோ இருக்கிறது என்பதை மற்ற நாய்கள் தெரிந்து கொள்ளும். இந்த சிறுநீரானது நாய்களுக்கு தகவல் தொடர்பாக இருக்கின்றன. நாய்கள் எப்போதுமே தட்டையான தளங்களை விட சாய்வுதளங்கள் மீது சிறுநீர் கழிக்கவே விரும்பும்.
ரப்பர் டயர்களில் நாய்கள் சிறுநீர் கழித்தால் அது நீண்ட நேரம் இருக்கும். ஆனால் தரைகளில் கழித்தால் அது சில மணிகளில் காற்றில் கலந்து வாசனை இல்லாமல் போய்விடும். மேலும் ரப்பரின் வாசனையும் நாய்களுக்கு மிகவும் பிடிக்கும். ரப்பர் டயர்கள், கரண்ட் கம்பங்களில் சிறுநீர் கழித்தால் நாய்கள் அதன் அருகே நின்றாலும் அந்த வாசனை மூக்கை துளைக்கும் அளவுக்கு இருக்கும். இதனால்தான் நாய்கள் கரண்ட் கம்பத்தை பார்த்து கால்களை தூக்கி சிறுநீர் கழிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications