Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருஷ வருஷம் ”பொங்கல் படி” கொடுப்பது ஏன் தெரியுமா? தாய் வீட்டில் இருந்து வரும் சீர்! சிறப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களின் பாரம்பரியங்களில் பொங்கல் பண்டிகைக்கு தனி இடம் உண்டு. உழவுக்கு உதவி செய்த இயற்கை மற்றும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் போது, திருமணம் முடித்து கொடுத்த மகள் வீட்டிற்கும் சீர் கொண்டு செல்லும் பழக்கம் இன்றளவும் மக்கள் மத்தியில் உள்ளது. இந்த பொங்கல் சீரின் சிறப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழர்கள் பாரம்பரியத்தில் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் பொங்கல் பண்டிகைக்கு தனி இடம் உண்டு. பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை அறுவடை திருநாள் என்றும் ஆழைக்கப்படுகிறது.

pongal 2025 pongal seer 2025

பொங்கல் பண்டிகை:

விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பயிர்களை கடவுளாக பார்க்கும் சூரியனுக்கு படையலிடுவார்கள். புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு உண்டு மகிழ்வார்கள். தங்கள் உற்றார் உறவினர்களுக்கும் பொங்கலை பகிர்ந்து அளித்து சாப்பிடுவர்கள். பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை மூன்று நாட்கள் கொண்டாடுவர்கள். பொங்கலுக்கு அடுத்த மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் என்றும் அதற்கு மறுநாளை காணும் பொங்கல் எனவும் கொண்டாடி மகிழ்வார்கள்.

பொங்கப் பொடி என்ற பொங்கல் சீர்

தைத்திங்களில் நம்வாழ்விற்கு உதவியாக இருக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கு பொங்கலிட்டு நன்றி கூறும் விழாவாக பொங்ல் கொண்டாடப்படுவது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். பொங்கல் பண்டிகையின் போது கடைப்பிடிக்கப்படும் மற்றொரு பாரம்பரியம் திருமணம் முடிந்து சென்ற மகளுக்கு சீர் கொடுக்கும் வழக்கம். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இந்த பழக்கம் இன்றளவும் அதிகம் நடைமுறையில் உள்ளது.

மஞ்சல் குலை, கரும்பு கட்டுகளுடன்

கிராமப்புற பகுதிகளில் இதை பொங்கப் பொடி என்பார்கள். பொங்கலுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பே புதுப்பானைகள், அரிசி, பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், மஞ்சள் குலை, பணங்கிழங்கு, கிழங்கு வகைகள் மற்றும் கரும்பு கட்டுகளுடன் வண்டிகள் கிராமப்புற சாலைகளில் அணி வகுத்து செல்வதை பார்க்க முடியும். டாடா ஏஸ்கள், டக்கர்களில் இப்படி கரும்புக்கட்டுகளுடன் மகளை கட்டிக்கொடுத்த வீட்டிற்கு தந்தை, சகோதர்கள் தங்கள் உறவினர்களை அழைத்துக்கொண்டு செல்லும் காட்சிகளை பொங்கல் வந்தாலே கிராமப்புறங்களில் பார்க்க முடியும்.

pongal 2025 pongal seer 2025

தலை பொங்கல்

பொங்கல் சீர், பொங்கல் படி என்பது தற்போது பேச்சு வழக்கில் பொங்கல் பொடி என்று சொல்லப்படுகிறது. மணம் முடித்து புகுந்த வீட்டிற்கு சென்ற தங்களது மகள், எந்த குறையும் இல்லாமல் கடைசிவரை மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கம் தமிழர்கள் மத்தியில் காலம் காலமாக உள்ளது. திருமணம் முடிந்த முதல் பொங்கலை தலை பொங்கல் என்பார்கள்.

தங்கள் வசதிக்கு ஏற்றபடி தடல் புடலாக இந்த பொங்கல் பொடி மகள் வீட்டிற்கு செல்லும். திருமணம் முடிந்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிலர் கொடுக்கிறார்கள். சிலர் தங்கள் இறுதிகாலம் வரை பொங்கல் பொடி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் பொங்கல் சீர் வழங்கும் நடைமுறை பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே களைக்கட்டத் தொடங்கும்.

pongal 2025 pongal seer 2025

மண்பானைகள், பாத்திரங்கள்

புகுந்த வீட்டில் தன் மகள் பொங்கல் வைப்பதற்கு பித்தளை பானைகள், மண்பானைகள், கரண்டி, அரிசி, சர்க்கரை, கரும்பு, காய்கறிகள், கிழங்குகள், மஞ்சள் கொத்து, மசாலா சாமான்கள் எனப் பல வகையான பொருட்களை ஆசை ஆசையாக வாங்கி கொண்டு செல்கிறார்கள். தற்போது இது வெறும் பாரம்பரியாகமாக மட்டுமல்லாமல் ஒருவித கவுரவமாகவும் பார்க்கப்படுகிறது.

பொங்கல் சீர் வரிசை கொடுப்பதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே காய்கறிகள், கரும்புகள், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் விற்பனை களைக்கட்டும். அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார், வாழை இலை கட்டு, மஞ்சள் கொத்து, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விற்பனை களை கட்டி உள்ளது.

மணம் முடித்து புகுந்த வீட்டிற்கு சென்ற தங்களது மகள், எந்த குறையும் இல்லாமல் கடைசிவரை மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பொங்கல் சீர் வருஷம் வருஷமாக கொடுக்கும் வழக்கம் தமிழர்கள் மத்தியில் காலம் காலமாக உள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+