ரஜினி ஏன் அப்படி பேசினார்? கண்கள் விரிந்த ஐபிஎல் அதிகாரிகள்.. விசாரணையில் இறங்கிய தமிழக உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் பேசிய ஒரு விசயத்தின் பின்னணி பற்றி தெரிந்துகொள்ள திமுக தலைமை மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, நாட்டின் பாதுகாப்பு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் ரஜினி.

அந்த வீடியோவில், ''நம் நாட்டின் நற்பெயர், நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை கெடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி, நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை பலிகொண்டது.

ஆகவே கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரியவர்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிஐஎஸ்எப் வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள்.

Take a Poll

அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் சென்று, உற்சாகப்படுத்துங்கள்! நன்றி... வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த்'' என்று பேசியிருந்தார் ரஜினி.

ரஜினிகாந்த் பேச வேண்டியது ஏன்?

நாட்டின் பாதுகாப்பு குறித்தும், கடலோர பாதுகாப்புக் குறித்தும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமோ, உள்துறை அமைச்சகமோ பேச வேண்டிய ஒரு விழிப்புணர்வு அல்லது எச்சரிக்கை விசயத்தை நடிகர் ரஜினிகாந்த் பேச வேண்டிய அவசியம் அல்லது தேவை என்ன இருக்கிறது என்று தமிழக ஐ.பி.எஸ். வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே பேசு பொருளாகி வருகிறது. இது, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Do you know why Rajinikanth talked about Tamil nadu state security all of a sudden

கடலோர பாதுகாப்பு பற்றி ரஜினி எச்சரிக்கைச் செய்வது எதனால்? என்கிற சந்தேகமும் அரசின் உயரதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாக, திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், திமுகவை பயமுறுத்த மத்திய அரசு திட்டமிடுவது வழக்கமாக நடக்கும். அந்த பயத்தை உருவாக்க, தமிழகத்தில் விடுதலை புலிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது; பயங்கரவாதிகள் ஊடுருவத் திட்டமிட்டுள்ளனர்; இது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது என்றெல்லாம் மத்திய அரசால் கட்டமைக்கப்படும்.

சமீபத்தில் கூட அமித் ஷா செய்த போஸ்டில், 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும், என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தொடர்பாக தமிழக பாஜக, அதிமுக கூட சமீபத்தில் அமித் ஷாவை சந்தித்து டெல்லியில் புகார்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது.

உளவுத்துறை புகார்

கடந்த காலங்களில் பல முறை இப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடத்த டெல்லி திட்டமிடுகிறதா? அல்லது முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருக்கும் திமுகவை, முஸ்லீம்களுக்கு எதிராக திருப்ப முயற்சிக்கிறதா? அதற்கு முன்னோட்டமாக ரஜினியை பேச வைத்திருக்கிறார்களா? என்கிற கேள்விகள் அதிகாரிகள் மட்டத்தில் எதிரொலிக்கிறது. இதனால் ரஜினியின் பேச்சின் பின்னணி என்னவாக இருக்கும் ? என்பதை அறிந்து ரிப்போர்ட் தரும்படி உளவுத்துறையிடம் அரசு தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறதாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+