வள்ளியூர் ரோட்டில் லுங்கியுடன் ஜி.பி.முத்து.. "மூஞ்சியையும் முகரையும் பாரு".. வாயை பிளக்கும் மக்கள்
வள்ளியூர் சாலையில் ஜிபி முத்து பேனரை பொதுமக்கள் கவனித்து செல்கிறார்கள்
சென்னை: நெல்லை ஹைவேஸில், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.. என்னவா இருக்கும்?
டிக்டாக் என்றாலே ஜிபி முத்து ரொம்ப ஃபேமஸ்.. ரொம்ப இயல்பாக எதார்த்தமாக இவர் பேசும் நெல்லை பாஷைக்கும் வார்த்தைக்கும் ரசிகர்கள் அதிகம்.
"டிக்டாக் நண்பர்களே" என்று கூப்பிடும்போதே ரசிகர்கள் அந்த வார்த்தையில் விழுந்துவிடுவார்கள்.. இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர்.. இவரது வீட்டை ஒட்டியே ஒரு மரக்கடையை வைத்து நடத்தி வருகிறார்.

மரக்கடை
இவரது பெரும்பாலான வீடியோக்கள் மரக்கடையில்தான் எடுத்திருப்பார்.. சுருக்கமாக சொல்ல போனால், மரக்கடை பிசினஸ் பார்ட் டைம்தான்.. இந்த டிக்டாக் தான் ஃபுல் டைம் வேலையாக இருக்கும். காலையில் பல் துலக்குவது முதல் இரவு தூங்க செல்லும் வரை இவருக்கு உலகமே டிக்டாக்தான். டிக்டாக் ஆப்பை தடை செய்துவிட்டதால், அப்போதிருந்தே சோகமாக இருந்தார்..

ஸ்டிரைட்டாக பிரதமர்
பிறகு ஸ்டிரைட்டாக பிரதமர் மோடிக்கே கோரிக்கை விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. "ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.. இந்த டிக்டாக்கை முதல்ல ஓபன் பண்ணுங்க.. எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு.. என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒன்னுமே சரியில்லை பார்த்துக்கிடுங்க" என்று அழுதுகொண்டே கோரிக்கை வைத்திருந்தார்.

டிவி ஷோக்கள்
இதற்கு பிறகு வேறு வழியில்லாமல் சகஜநிலைமைக்கு திரும்பினார்.. அடிக்கடி வீடியோக்களை ஷேர்செய்தும் வருகிறார்.. சில டிவி ஷோக்களிலும் தலைகாட்டி வருகிறார்.. அந்த வகையில், ஜிபி முத்து பேசும் பேச்சுக்கு மட்டுமல்ல, அவர் ஆத்திரமும் ஆவேசத்துடன் திட்டி திட்டி பேசும் வார்த்தைகளுக்கும் ரசிகர்கள் அதிகம்.. ஜிபி முத்து கோபமாக பேசினால், அதை ரசிக்கும் மக்கள்தான் அதிகம்.

திருஷ்டி பொம்மை
இப்போது விஷயம் என்னவென்றால், வீடுகட்டும்போது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது.. காரணம், மற்றவர்களின் கண்பார்வை பதியும்போது, அந்த புது வீட்டுக்கு திருஷ்டி ஏற்பட்டு விடும் என்பது பெரியவர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.. அதனால், திருஷ்டி போவதற்காக, தங்கள் வீடுகளில் தும்பை, துளசி, மணிபிளாண்ட், வெற்றிலை, அருகம்புல் போன்ற செடிகளை சமீபகாலமாக அதிகமானோர் வளர்த்து வருகின்றனர்.

மூஞ்சியை பாரு
ஆனால் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் மட்டும் வித்தியாசமான யோசனையை மேற்கொண்டுள்ளார்.. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே, தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு வீடு கட்டி வருகிறார் கண்ணன்.. அதனால், அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் திருஷ்டி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஜிபி முத்துவின் பேனரை வைத்துள்ளார்..

முகரையை பாரு
"மூஞ்சியையும் முகரையும் பாரு" என்ற வாசகம் பதித்து அந்த டிஜிட்டல் போர்டை வைத்திருக்கிறார்.. இதனை அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைவருமே திரும்பி திரும்பி பார்த்து விட்டு சிரித்து கொண்டே கடந்து செல்கின்றனர்.. அந்த பேனரில்தான் கையை டென்ஷனாக சுட்டிக்காட்டி, லுங்கியுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் ஜிபி முத்து..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications