என்னை கைது செய்யாததால்.. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. அண்ணாமலை தாக்கு
சென்னை: சென்னையில் போராட்டம் நடத்திய என்னை கைது செய்யாததற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்ட பயணம் முடிந்து தற்போது இரண்டாவது கட்டமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் பாத யாத்திரை இன்று மாலை திண்டுக்கல் மாவட்டம் பழநி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானலில் நடைபயணத்தை தொடங்கினார்.

அப்போது அங்கு மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை கூறியதாவது:- இந்தியா இன்றைக்கு பாதுகாப்பாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை குண்டு வெடிப்புகள், எத்தனை பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வந்தார்கள். ஆனால், பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவினரும் அமைச்சர்களும் பிரதமரை பார்த்து அச்சப்படுகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி நடத்திய முற்றுகை போராட்டத்தின் போது என்னை கைது செய்யாதற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஒரே குடும்பத்திற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் உழைத்து வருகிறார். மகனும் மருமகனும் சம்பாதிப்பதற்காக ஆட்சி நடைபெற்று வருகிறது. சிலருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்ற குழப்பம் இருக்கிறது.
சனாதானம் என்பது மக்கள் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கும் ஒரு தர்மம் ஆகும். எல்லா மக்களையும் சனாதனம் அரவணைத்து சென்றது. அரவணைக்க கூடியது இந்துத்துவம். டெங்கு, மலேரியா, கொசு எப்படி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாதோ அதுபோல திமுகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications