"ஆப்பு".. பிரபல நடிகருடன் சேரும் கட்சி..புது அணியா? சிக்குதா "சில்லுவண்டு".. குழம்பும் திமுக, அதிமுக
சென்னை: தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இதுகுறித்து யூகங்களும், கணிப்புகளும் சோஷியல் மீடியாவில் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன.
கடந்த ஒரு வருட காலமாகவே, திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.. அதற்கேற்றவாறு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சரி, தலைவர் அன்புமணியும் சரி, திமுகவை அவ்வளவாக விமர்சிக்காமலேயே இருந்து வருகிறார்கள். வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் காரணமாக, திமுகவிடம் இணக்கமான போக்கை, பாமக கையில் எடுப்பதாக கருதப்பட்டது.

அதுமட்டுமல்ல, அன்று, அக்கட்சி நடத்திய அவசர செயற்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, "தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில் கூட தயார் செய்ய முடியும். இதனை அவர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசியிருந்ததையும் நாம் இங்கு நினைவில் கூறவேண்டியுள்ளது.
திமுக கூட்டணி: எனினும், நெய்வேலி பிரச்சனையை பாமக கையில் எடுத்து போராட்டத்தை நடத்தியதால், திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றே கணிக்கப்பட்டது.. இப்போது, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துள்ளதால், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமியும், தன்னுடைய கூட்டணியை தக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் முதல்வர் ஸ்டாலினும் உள்ளனர். எனவே, இரு தரப்பின் கவனமும் பாமக மீது விழுந்துள்ளது.
நேற்று முன்தினம், அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.. ஒருவேளை, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், முரண்டு பிடித்தால், பாமகவுக்கான ஆதரவு கதவை திமுக திறந்துவிடவும் தயாராக இருப்பதாக தெரிகிறது. இதே முயற்சியைதான் அதிமுக தரப்பும் மேற்கொண்டு வருகிறது.
யாருடன் கூட்டணி: எனினும், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்ககூடிய இடத்தில் பாமக திகழ்ந்து வருகிறது. தனக்கான வாக்குகளையும் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. அந்தவகையில் பாமகவின் ஆதரவு யாருக்கு கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடிவருகிறது. மற்றொருபக்கம், பாமகவின் "டிமாண்டும்" அதிகமாகவே இருப்பதாக தெரிகிறது.
ஒரு சமூகத்துக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்துவிட்டால், மற்ற சமூகங்களும் தனித்தனியாக உள் ஒதுக்கீடு கேட்டு வந்துவிட்டால் என்னாவது? என்ற எண்ணம் திமுக மேலிடத்துக்கும் இருக்கவே செய்கிறது.
நடிகர் விஜய்: ஒருவேளை, திமுக, அதிமுக என இரு தரப்புடனுமே கூட்டணி வைக்காமல் போனால், தனி கூட்டணி அமைத்து போட்டியிடவும் பாமக தயாராகும் என்கிறார்கள்.. அதற்கேற்றவாறு, அன்புமணிக்கு, போனை போட்டு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார்..
இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாளுக்குமே, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்ததில்லை.. இப்போதுதான் முதல்முறையாக இந்த வழக்கத்தை கையில் எடுத்துள்ளார்.. கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.. அப்போதே இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது..
ஹேப்பி பர்த்டே: இந்த வாழ்த்துக்கு பின்னணியில், அரசியல் நோக்கம் இருப்பதாகவே கருதப்பட்டன.. இதைத்தொடர்ந்து நேற்று, அன்புமணிக்கும் வாழ்த்து சொல்லியிருப்பது, அரசியல் அரங்கில் மீண்டும் அனலை கூட்டியுள்ளது.. அப்படியானால், திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது சாத்தியமாகாவிட்டால், தனி கூட்டணி அமைக்கவும் பாமக ஆலோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், விஜய்யின் இந்த வாழ்த்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வளர்த்த கடா: அதுமட்டுமல்ல, திருமாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய், தன்னை "தூக்கிவிட்ட" தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற கேள்வி அப்போதே கிளம்பியது. விஜயகாந்த் என்ற மாபெரும் மனிதர் அன்று இல்லாவிட்டால், இன்று விஜய் என்ற மிகப்பெரிய சக்தி தமிழகத்துக்கு கிடைத்திருக்க மாட்டார்.. வளர்த்த கடா மார்பிலே பாயுதே? என்றெல்லாம் விவாதங்களும் வெடித்தன.
ஆனால், வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தி நடிகர் விஜய், அரசியலில் தீவிரம் எடுக்க நேர்ந்தால், தேர்தலில் விஜய் போட்டியிட நேர்ந்தால், தேமுதிகவும் அவருடன் இணைந்து செயல்படும் என்றும், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக, விஜய் + விஜய்காந்தின் தொண்டர்கள் மிகப்பெரிய மாற்றத்தை விதைப்பார்கள் என்றும் ஒரு டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
குழப்பம்: ஆக நடிகர் விஜய், பாமக அன்புமணிக்கும் வாழ்த்து சொல்லி உள்ளார், விசிக திருமாவளவனுக்கும் வாழ்த்து சொல்லி உள்ளார்.. அதேபோல, தேர்தல் அரசியலை விஜய் கையிலெடுத்தால், தேமுதிகவுடன் இணைவாரா? பாமகவுடன் இணைவாரா? என்பதும் குழப்பமாகவே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications