அம்மா உணவகத்தை மூடுவதா.."ஒவ்வாமை" இருந்தால் பெயரை மாற்றுங்கள்..மேயர் பிரியாவிடம் வேண்டுகோள்!
நோயாளிகள் மட்டுமல்லாது உடன் வருபவர்கள் பலரது பசியாற்றும் அம்மா உணவகங்களை மூடுவதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் நோயாளியின் உடனிருப்போர் அனைவரும் பசியாறும் இடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அம்மா உணவகம் சிறப்பான சேவை செய்வதால்
அதை மூட நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளதாகவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவரின் ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 10 கோடம்பாக்கத்திற்கு உட்பட்ட 127-வது வார்டு முதல் 142-வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மேயர் பிரியா
செய்தியாளர்களிடம் பேசிய பிரியா, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 178 சாலைகள் அமைக்கும் பணி, 58 பூங்காக்கள் மேம்படுத்தும் பணிகள் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமுதாய நலக்கூடங்களில் தனிநபர்கள் அதிக கட்டணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அப்படி ஏதேனும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்களின் நிலை
அம்மா உணவகங்களில் உணவு தரமான முறையில் வழங்கப்பட வேண்டும், இதனை மாமன்ற உறுப்பினர்கள் கண்காணிக்க அதிகாரிகள் முறையாக செயல்பட வேண்டும் என மேயர் பிரியா அறிவுரை வழங்கினார்.
அம்மா உணவகங்களை மக்கள் சரியாக பயன்படுத்துவதில்லை. பல இடங்களில் பூட்டை கூட திறக்காத நிலை உள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரின் ஆலோசனைப்படி செயல்படுவோம் என்று கூறினார். இவரது கருத்துக்கு தற்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பசியாறும் நோயாளிகள்
மருத்துவர் அனுரத்னா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்(தற்போதைய அரசு மருத்துவக்கல்லூரி) ஒருநாள் பணிக்கு சென்றபோது அங்குள்ள அம்மா உணவகத்தில் உண்டேன். நான் அவர்களுக்கு உதவி செய்யவே போகிறேன் என்று எனக்கு அங்குள்ள மருத்துவ நண்பர்கள் உணவு கொடுத்து அனுப்பினார்கள் பிரசவ வார்டுக்கு ஆனால் அதுக்கும் முன்பே இந்த அம்மா உணவகத்தில் இன்று ருசி பார்க்க வேண்டும் என்றே மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் சென்று சாப்பிட்டேன்.

அம்மா உணவகத்தின் ருசி
நோயாளியின் உடனிருப்போர் அனைவரும் பசியாறும் இடமாக அது இருந்தது. அவ்வளவு ஒரு கூட்டம் அங்கு இருந்தது. அதேபோல் எழும்பூர் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்காக செல்லும்போதெல்லாம் எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தை கண்டதுண்டு....கண்ணீர் வரும் நமக்கு அங்குள்ள பலரும் பசியாறுவது கண்டு. இதுபோன்ற இடங்களில் எல்லாம் அம்மா உணவகம் சிறப்பான சேவை செய்கிறது. பெயரில் ஒவ்வாமை இருந்தால் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். திட்டத்தை கைவிட வேண்டாமே..எனது தாழ்மையான வேண்டுகோள் இது. நமக்கும் கீழே உள்ளவர் கோடி.அவர்கள் பசியாறட்டுமே... என்று மருத்துவர் அனுரத்னா தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications