11 மணி நேரம் பணி! வரலாறு காணாத செவிலியர் போராட்டம் வெடிக்கும்! சுகாதாரத்துறையை விளாசும் ரவீந்திரநாத்
சென்னை: பிரசவ அறைகளின் தரத்தை மேம்படுத்துதல் திட்டம் என்ற பெயரில், அதில் தொடர்புடைய செவிலியர்களின் பணி நேரம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை என மறைமுகமாக திணிக்கப்படுவதாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தரத்தை உயர்த்துதல் என்ற பெயரில் , செவிலியர்களின் பணி நேரத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது என்ன நியாயம்? என அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பிரசவ அறைகள்
''LaQshya Scheme என்ற பெயரில், அதாவது பிரசவ அறைகளின் தரத்தை மேம்படுத்துதல் திட்டம் என்ற பெயரில், இத்திட்டத்தில் தொடர்புடைய செவிலியர்களின் பணி நேரம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை என மறைமுகமாக திணிக்கப்படுகிறது. இது செவிலியர்களின் உரிமைகளுக்கு எதிரானது. பகலில் 6.00 மணி நேர வேலை, இரவில் 12.00 மணி நேர வேலை என்பதற்கு எதிரானது.''

செவிலியர்கள் பணி நேரம்
பிரசவ அறைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது தாய்மார்களின் நலன் கருதி,பிறக்கும் குழந்தைகளின் நலன் கருதி உயர்த்தப்பட வேண்டும். ஆனால், இந்த தரத்தை உயர்த்துதல் என்ற பெயரில் , செவிலியர்களின் பணி நேரத்தை இரண்டுமடங்காக உயர்த்துவது என்ன நியாயம்?''

எது சிறந்த மாடல்?
''அதுவும் இதற்கு எந்தவித கூடுதல் ஊதியமும் இல்லை. மிரட்டி, கட்டாயப்படுத்தி,எந்த வித எழுத்துப் பூர்வ உத்தரவும் இன்றி பணிநேரம் உயர்த்தப்பட்டுள்ளது. செவிலியர்களின் உழைப்பை இவ்வாறு கடுமையாக சுரண்டுவது, மனித உரிமைகளை மீறுவது எவ்வாறு சிறந்த முன்மாதிரியாக இருக்கும்? எட்டு மணி நேர வேலையை 6 மணி நேரமாக குறைத்தால் அது சிறந்த மாடல்! 6 மணி நேர வேலையை 12 பணி நேரமாக உயர்த்துவது எவ்வாறு சிறந்த மாடலாக இருக்க முடியும்?''

போராட்டம் வெடிக்கும்
''இங்கு ஏதோ ஓர் சிறந்த மாடல், இந்தியாவிலேயே ,ஏன் உலகத்திலேயே இல்லாத ஹெல்த் மாடல் இருப்பதாக வாய்கிழிய பேசுவோர் இதற்கு பதில் அளிப்பார்களா? பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதுதான் சிறந்த மாடலா? பதிலை எதிர்பார்க்கிறோம். பணி நேர உயர்வு ரத்தையும் எதிர்பார்க்கிறோம். இல்லை எனில்... வரலாறு காணாத அளவில் செவிலியர் போராட்டம் வெடிக்கும். அது நமது "மாடலின்" முகத்திரையை கிழிக்கும்.'' இவ்வாறு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications