தாத்தாவின் சொத்தில் பேத்திக்கு உரிமை உள்ளதா? உயில் எழுதாவிட்டாலும் தாயின் சொத்தை மகள் பெற முடியுமா
சென்னை: தாயின் சொத்தில் மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா? அம்மா சொத்து: அம்மாவின் சொத்தினை, தன் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க முடியுமா? தாத்தா சொத்து பேரனுக்கு நேரடியாகவே கிடைத்துவிடுமா? பெண்களுக்கு சொத்துரிமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன? திருமணமாகாத பெண்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு உள்ளதா இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
தாயின் சொத்தினை, தன்னடைய விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் மூலமாகவோ, செட்டில்மென்ட் போன்றவற்றின் மூலமாகவோ தரலாம்..

ஒருவேளை, யாருக்குமே சொத்தை எழுதி தராமல் தாய் இறந்துவிட நேர்ந்தால், தாயின் முதல் வாரிசுக்கு போய் சேர்ந்துவிடும்.. ஆண் வாரிசாக இருந்தாலும்ரி, பெண் வாரிசாக இருந்தாலும் சரி, அவருக்கே அது சேரும்.
தாய் சொத்துக்கள் மகளுக்கு உண்டா
அதேசமயம், தாய் சுயமாக சம்பாதித்த சொத்தினை, அவர் இறப்பதற்கு முன்பு, தன்னுடைய முழு சொத்தையும் மகன்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டால், அதில் மகள்கள் உரிமை கோர முடியாது.. சொத்துக்களை தாமாகவே தர முன்வராத நிலையில், அதனை மகள்கள் சட்டப்படி உரிமை கோரவும் முடியாது. மகளுக்கும் பங்கு உள்ளதாக உயிலில் எழுதியிருந்தால் அல்லது உயிலே எழுதாமல் இருந்தாலோ சொத்தில் உரிமை உண்டு.
அதுபோலவே, சுயமாக தாய் ஒரு நிலத்தை வாங்கி அதை தானாகவே முன்வந்து தராத நிலையில், மகள்களுக்கு அதில் உரிமை இல்லை, சட்டப்படி உரிமை கோரவும் முடியாது. ஆனால் மூதாதையர் நிலத்தினை, அவர்கள் காலமான பிறகு, வாரிசு என்ற அடிப்படையில் அம்மா அடைந்ததன் மூலம் உரிமை பெற்றிருந்தால், அவர் தாமாக தர முன்வராத நிலையில், அதனை மகள்கள் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி உரிமை கோரலாம்.
தாத்தா சொத்து அப்பாவுக்கா, பேரனுக்கா
அப்பாவின் சொத்தில், மகள்களுக்கும் உரிமை உள்ளது.. திருமணமானாலும் சரி, ஆகாவிட்டாலும்சரி, அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கு பங்கு உள்ளது.
அதேபோல, முதல் மனைவிக்கு வாரிசுகள் இல்லாத பட்சத்தில், அதாவது உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்த சொத்தை 2ம் வாரிசுகளுக்கு, அதாவது மகனின் மகள் அல்லது மகன், மகளின் மகள் அல்லது மகள், சகோதரன், சகோதரி போன்றவர்களுக்கு சொத்தை பிரித்து தரலாம்..
பேத்திக்கு உரிமை உண்டா?
அதேபோல, தாத்தாவின் சொத்துக்கள் பேரனுக்கு வந்துவிடுமா? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.. தாத்தா உயிருடன் இருக்கும்போதே, சுயமாக சம்பாத்திய சொத்து, யார் யாருக்கு சென்றடைய வேண்டும்? என உயிலில் எழுதிவிட்டால், அதன்படியே பேரன், பேத்திகள் உரிமை பெற முடியும்.
ஆனால், உயில் எழுதப்படாத நிலையில், அவரது சுய சம்பாத்திய சொத்தில், பங்கு பிரிப்பது சிக்கலை தந்துவிடும்.. உயில், எழுதப்படாத சுய சம்பாத்திய சொத்தை பிரிக்கும் போது, பாட்டி இருந்தால், அவருக்குள்ள உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதேபோல, பேரன் பேத்திகளுக்கு பெற்றோர் உள்ளனரா? பெற்றோரின் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களது வாரிசுகள் ஆகியோரின் உரிமைகளையும், கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
தாத்தாவின் சொத்துக்கள்
சிலசமயம், குறிப்பிட்ட சொத்தின் பரம்பரை உரிமை, தாத்தாவுடன் முடிவடைந்துவிட்டால், அது, அவரது தனிப்பட்ட சொத்தாகி விடவும் வாய்ப்புள்ளது.
ஆனால், தாத்தா தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சொத்துக்களை வாங்கியிருந்தால், அந்த சொத்துக்களை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி தரலாம்.. பேரனாக இருந்தாலும், இதனை எதிர்க்க முடியாது.
ஒருவேளை அந்த நபர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது உடனடி சட்ட வாரிசுகளான மனைவி, மகள், மகன் போன்றோர், அவரது சுய சம்பாத்திய சொத்துகளுக்கு உரிமை கோர முடியுமே தவிர, பேரனுக்கு பங்கு கிடைக்காது.. எனினும், உரிமை பெற்றவர்களும், அவைகளை தனிநபர் சொத்தாகவே கருத முடியும்.
ஒருவேளை தாத்தாவின் மகனோ அல்லது மகளோ, அவர் இறப்பதற்கு முன்பே இறந்துவிட்டால், மூத்த மகன் அல்லது மகளுக்கு கிடைக்கும் பங்கு, இறந்தவரின் சட்ட வாரிசுகளான மகனுக்கோ அல்லது மகளுக்கோ தரப்படவேண்டும்.
தாத்தா சொத்து பேரனுக்கா?
ஒருவரது தாத்தா இறந்துவிட்டால், அந்த தாத்தாவின் சொத்து முதலில் பேரனின் தகப்பனாருக்குதான் முதலில் போகும். பிறகுதான் அவரது மகனுக்கு அதாவது தாத்தாவின் பேரனுக்கு கிடைக்கும்.
ஒருவேளை தாத்தா இறக்கும்முன்பே, அந்நபரின் அப்பா இறந்துவிட்டால், அப்போதுதான் தாத்தாவின் சொத்து பேரனுக்கு நேரடியாக வந்து சேரும் . ஒருவேளை மூதாதையர் சொத்தில் தன்னுடைய பங்கை தந்தை தர மறுத்தால், அவரது மகன், தன்னுடைய தாத்தா சொத்தை கேட்டு கோர்ட்டை அணுகலாம்,
இந்திய சொத்துரிமை சட்டம், இந்திய வாரிசுரிமை சட்டம் ஆகியவற்றில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில், பேரன், பேத்திகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டலாம் என்றாலும், இதுதொடர்பான சந்தேகங்களை, வழக்கறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதும், ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications