"சேலஞ்ச்".. பாஜகவின் அடுத்த "ராஜதந்திரம்".. சறுக்குகிறதா திராவிட மாடல்.. வெடிக்கும் விவாதம்

நிஜமாகவே திராவிட மாடலை திமுக அரசு கடைப்பிடிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்கு எதிராக பாஜக நிஜமாகவே வளர்ந்து கொண்டிருக்கிறதா? அல்லது திராவிட மாடலைதான் திமுக கடைப்பிடித்து வருகிறதா? போன்ற சந்தேகங்கள் எழுந்தபடியே உள்ளன.

திமுக Vs பாஜக என்ற பிம்பத்தை, தமிழக பாஜக விடாமல் பதிவு செய்து வருகிறது... ஆனால், வாக்கு சதவீதம் மற்றும் நடைமுறை அரசியலில் பார்த்தால், அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்பதை இந்த தமிழகமே ஒப்புக் கொள்ளும்.

மற்றொரு பக்கம், பாஜகவின் அதிரடிகளையும், புகார்களையும் திமுக ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை என்றாலும், சமீபகாலமாகவே பதிலடி தந்து வருகிறது.. பாஜகவின் புகார்களை, திமுக தம்பிகள் அசால்ட்டாக எடுத்து கொள்ளக்கூடாது என்று மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சும் எச்சரித்திருந்ததை இங்கு மறுக்க முடியாது.

 பாஜக - டேமேஜ்

பாஜக - டேமேஜ்

திமுகவை பாஜக தொடர்ந்து எதிர்க்க காரணம் என்ன? திமுகவின் ஓட்டு வங்கியைவிட, அதிமுகவுக்கு ஓட்டுவங்கி அதிகம் இருப்பது தெரிந்தும், அதிமுக இல்லாமல் எந்த தேர்தலையும் தங்களால் தனித்து சந்திக்க முடியாது என்று தெரிந்தும், பாஜக திராவிட கட்சிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் டேமேஜ் செய்ய என்ன காரணம்? என்பது குறித்தெல்லாம் நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது:

 இதுதான் திராவிட மாடலா?

இதுதான் திராவிட மாடலா?

திராவிட மாடல் என்ற விஷயத்தை திமுக தொட்டதுதான் முதல் காரணம்.. இது பாஜகவை அதிகமாகவே சீண்டிவிட்டது.. அப்படியே திராவிட மாடல் ஆட்சி என்றாலும் அதை திமுக சரியாக கடைப்பிடிக்கிறதா என்றால் சந்தேகம்தான்.. உதாரணத்துக்கு, மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்ற சமத்துவத்தை முன்வைத்து தருமபுரம் ஆதீனம் பட்டனப்பிரேவச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.. பெரியாரிய அமைப்புகளும் வரவேற்றனர்.. ஆனால், பாஜக அழுத்தம் காரணமாகவும், மடாதிபதிகள் முதல்வரை சந்தித்து பேசியதன் விளைவாகவும், அந்த விஷயத்தில் அப்படியே பின்வாங்கப்பட்டுவிட்டது.. மக்களுக்கு இது அதிருப்திதான். அந்த பயம் இருக்கட்டும் என்று இதே பாஜக, திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு போய்விட்டது.

 மாட்டுக்கறி

மாட்டுக்கறி

ஆம்பூர் பிரியாணி திருவிழா, மாட்டுக் கறி விவகாரத்திலும் திடீரென தடை விதிக்கப்பட்டது.. மாட்டுக்கறிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.. மாறாக நிகழ்ச்சியையே கலெக்டர் ரத்து செய்துவிட்டார்.. முதல்நாள் அனுமதி, மறுநாள் ரத்து என்பதுதான் திராவிட மாடலா? இதுவும் மக்களிடம் அதிருப்தியை பெற்றுத்தந்தது.. இதற்கு நடுவில் பிரதமர் மோடியை விழாவுக்கு வரவழைப்பது, ஆர்எஸ்எஸ் பற்றாளரான வெங்கையா நாயுடுவை வரவழைத்து, கருணாநிதி சிலையை திறக்க வைப்பது, என ஒவ்வொன்றையும் செய்துவிட்டு, கடைசியில் திராவிட மாடல் என்றால், மக்கள் எப்படி நம்புவார்கள்?

 விசிக - திருமாவளவன்

விசிக - திருமாவளவன்

திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நொந்து போயுள்ளதாகவே தெரிகிறது.. பகிரங்கமாக தலைமையை எதிர்க்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றன.. நமக்கு நிதி தேவைதான்.. மத்திய அரசை பகைத்து கொள்ளக்கூடாதுதான்.. அதற்காக மென்மைப்போக்குக்கும், அடிபணிவதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே.. இந்த சந்தர்ப்பத்தைதான் அண்ணாமலை அசால்ட்டாக பயன்படுத்தி கொள்கிறார்.. சவால் விடுகிறார்..

 சேலஞ்ச் செய்த நாராயணன்

சேலஞ்ச் செய்த நாராயணன்

முடிந்தால் கைது செய்து பாருங்கள் என்று செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை சேலஞ்ச் செய்கிறார்.. முடிந்தால் அண்ணாமலையை கைது செய்து பாருங்கள் என்று பாஜக திருப்பதி நாராயணன் சேலஞ்ச் செய்கிறார்.. வலிய வலிய வந்து திமுகவை வம்பிழுக்கும் அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது.. இதை அரசுதான் சுயபரிசோதனை கொள்ள வேண்டும்.. மற்றொரு பக்கம், திமுகவின் இந்த அணுகுமுறை ஓரளவு சரியே.. ஏனென்று கேட்டால், மத்திய அரசை நேரடியாக எந்த ஒரு அரசும் விமர்சிக்காது..

ராஜதந்திரம்

ராஜதந்திரம்

அதேசமயம், பாஜகவின் தலையில் அடிக்கடி குட்டு வைத்து, தட்டி வைப்பதும் அவசியமாகிறது.. அதற்காகவே திருமாவளவன், கி.,வீரமணி போன்றோரை முன்னிறுத்தி, பாஜக அரசை விமர்சிக்க வைப்பதும், கேள்வி கேட்க வைப்பதும் ஒருவகை ராஜதந்திர அரசியல்தான்.. இப்போது 2 விஷயங்களை கையில் எடுப்பதாக சொல்கிறார்கள்.. திமுகவில் பல வருடங்கள் இருந்தும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிர்வாகிகளையும், அதிருப்தியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளையும் ஸ்கெட்ச் போட்டு தூக்க தமிழக பாஜக பிளான் செய்து வருவதாக தெரிகிறது.. ஏற்கனவே திருச்சி சிவா மகன் சிக்கி உள்ள நிலையில், இன்னொரு வாரிசுக்கும் குறி வைத்துள்ளதாக தெரிகிறது..

 நிஜமான திராவிட மாடல்

நிஜமான திராவிட மாடல்

திமுகவில் வாரிசு அரசியல் என்ற விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருவதால்தான், இந்த முறை ஆட்சி அமையும்போதே, வாரிசுகளுக்கு பெரிதாக திமுகவில் பதவி தரவில்லை... இப்போது இதுதான் பாஜகவுக்கு பிளஸ் ஆகிவிட்டது. அதனால்தான், வாரிசுகளையே மீண்டும் பாஜக குறி வைத்துள்ளதாக தெரிகிறது.. இதற்கெல்லாம் காரணம், ஏற்கனவே அண்ணாமலை மீது பல புகார்கள் பாஜக மேலிடத்துக்கு சென்றுள்ளதால், நல்ல பெயரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

 அனாலிசிஸ்

அனாலிசிஸ்

அதனால், இப்படி திருப்பங்கள் பாஜகவில் வரத்தான் செய்யும்.. திமுகதான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. சுருக்கமாக சொன்னால், இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லாமல், நடுநிலையாக நின்று, அதேசமயம், நிஜமான திராவிட மாடல் ஆட்சியையும் திமுக செயல்படுத்தினால் மட்டுமே பாஜக தலையெடுப்பை தடுக்க முடியும்" என்று சொல்லி முடித்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+