Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முட்டை சாப்பிட்டால் கேன்சர் வருமா? டெஸ்ட்டுக்கு போன ரிப்போர்ட் வந்தாச்சு! கர்நாடக அரசின் குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் 'நைட்ரோஃபுரான்' என்ற வேதிப்பொருள் இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகி கர்நாடகாவையே கதிகலங்க செய்துவிட்டது. இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.. அது என்ன?

முட்டை என்பது குறைந்த விலையில் கிடைக்கும், அதிக புரோட்டீன் சத்து கொண்ட முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் தினசரி உணவில் முட்டையை சேர்த்துக் கொள்கிறார்கள்.

Egg Cancer Myth Karnataka eggs

இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபல முட்டை உற்பத்தி நிறுவனமான எகோஸ் தயாரிக்கும் முட்டைகள் தொடர்பாக சமீப நாட்களாக பெரும் சர்ச்சை எழுந்தவாறே உள்ளது..

முட்டைகளில் ரசாயனம்

அந்த நிறுவனத்தின் முட்டைகளில், மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய 'நைட்ரோஃபுரான்' என்ற தடை செய்யப்பட்ட மருந்தின் தடயங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ஆய்வக பரிசோதனை அறிக்கையும் காட்டப்பட்டதால், பொதுமக்களிடையே அச்சமும் குழப்பமும் உருவானது.

'ஆன்டிபயாடிக் இல்லாத முட்டைகள்' என விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மருந்து இருப்பதாக கூறப்பட்ட தகவல், பெற்றோர் மற்றும் பொதுமக்களை பெரிதும் கவலையடைய செய்தது.. ஏனென்றால், 'நைட்ரோஃபுரான்' என்பது கோழி, பன்றி, இறால் போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் நோய்தொற்றுகளை தடுப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட மருந்தாகும்.

முட்டை சாப்பிட்டால் கேன்சர் வருமா

ஆனால், இந்த மருந்து மனித உடலுக்கு நீண்ட காலத்தில் தீங்கு விளைவிப்பதுடன், புற்றுநோய் மற்றும் மரபணு சேதம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதன் பயன்பாடு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே. கோழி வளர்ப்பில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து 'எகோஸ்' நிறுவனம் தங்களது பண்ணைகளில் எந்த தடை செய்யப்பட்ட மருந்துகளும் பயன்படுத்தப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் குறிப்பிடப்படும் அளவு, உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதித்த வரம்புக்குள் தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்தது. மேலும், தீவனம், நீர் அல்லது சுற்றுப்புற சூழல் காரணமாக தடயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், தங்களது முட்டைகள் பாதுகாப்பானவை என்றும் தெரிவித்தது.

டெஸ்ட்டுக்கு போன முட்டைகள்

எனினும், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட உணவு பாதுகாப்பு ஆணையம், நாடு முழுவதும் உள்ள அனைத்து முட்டை உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளையும் சோதிக்க கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்காகவே முட்டை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்டன.. தடை செய்யப்பட்ட மருந்துகள் உள்ளதா என்பதை விரிவாக பரிசோதித்து, உடனடி அறிக்கை வழங்க அதிகாரிகளுக்கு அப்போதே அறிவுறுத்தப்பட்டது.

பிறகு கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் இதுகுறித்து பேசும்போது, கடந்த ஆண்டில் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான முட்டை மாதிரிகள் தரமானவையாக இருந்ததாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. மேலும், முட்டைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சில நாட்களில் முழு அறிக்கை வெளியாகும் என்றும் கூறியிருந்தார்..

கேன்சர் நோய் ரசாயன நச்சுக்கள்

தற்போது அந்த ரிப்போர்ட்தான் வந்துள்ளது.. பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முட்டைகள் மாதிரி சேகரித்து இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதன் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

அதில், முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார்..

அச்சமின்றி முட்டை சாப்பிடலாம்

அப்போது, "கர்நாடகத்தில் முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் மக்கள் அதிருப்தியும், கலக்கமும் அடைந்தனர்.. மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம்.
அதன் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.

முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி முட்டையை சாப்பிடலாம்" என்றார்..

ஒரு வாரமாகவே மிகுந்த குழப்பமும் , கலக்கமும் அடைந்த கர்நாடக மக்களுக்கு, அரசு தந்துள்ள இந்த தகவலானது தற்போது நிம்மதியை தந்து வருகிறது. இந்த நிம்மதி நம்ம தமிழ்நாட்டிலும் எதிரொலித்து வருகிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+