அவசர அவசரமாக அங்கியே கிளம்பிய சென்ற எடப்பாடி பழனிசாமி.. கரெக்ட்டா அதே மாதிரி இப்பவும் நடக்குதே
சென்னை: எடப்பாடி பழனிசாமி திடீரென கேரளா சென்றிருக்கிறார்.. என்ன காரணம்? இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது..
எடப்பாடி பழனிசாமிக்கு சமீபகாலமாகவே மூட்டு வலி பிரச்சனை இருந்து வருகிறது.. அதாவது, இடது கால் மூட்டில் அதிக வலி இருப்பதாகவும், இதைத்தவிர வேறு சில எலும்பு பிரச்சனைகள் அவருக்கு இருப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மூட்டுவலி: இப்படித்தான், கடந்த வருடம் மே மாதமும் மூட்டுவலியால் கடும் அவதிப்பட்டார்.. இதற்கு காரணம், மே 12ம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் ஆகும்.. ஒவ்வொரு வருடமும் தொண்டர்களும், நிர்வாகிகளும், எடப்பாடியின் பிறந்தநாளை வெகுசிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், கடந்த வருடமும் ஜரூராக கொண்டாடப்பட்டது.
தொடர்ச்சியாக மேற்கொண்ட பயணங்கள், பிறந்தநாளை முன்னிட்டு, தொடர்ந்து 3 நாட்களும் தொண்டர்கள், நிர்வாகிகளின் வாழ்த்துக்களை நின்று கொண்டே பெற்றுக்கொண்டது, போன்ற காரணங்களினால், எடப்பாடிக்கு சென்ற வருடம் கால் வலி அதிகமாகிவிட்டது.
சேலம்: அதனால், சேலத்தின் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் எடப்பாடியின் வீட்டுக்கே சென்று டெஸ்ட் செய்தார்கள்.. பிறகு கோவையில் ஒரு தனியார் ஹோட்டலில் எடப்பாடி தங்கியிருக்க, கோவையிலுள்ள பிரபல எலும்பு சிகிச்சை மருத்துவமனை டாக்டர்கள், அந்த ஹோட்டலுக்கே சென்று எடப்பாடிக்கு சிகிச்சை தந்தார்களாம்.. இந்த சிகிச்சைக்கு பிறகும், தன்னுடைய வீட்டிலேயே பிசியோதெரபியும் மேற்கொண்டு வந்ததால், மூட்டுவலியும் ஓரளவு தீர்வை தந்தது என்று சொன்னார்கள்.
ஆனால், அதற்குள் இப்போது மீண்டும் தேர்தல் வந்துவிட்டதால், பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளானார் எடப்பாடி.. அதுவும் இந்த முறை, அதிமுகவுக்காக தனி நபராகவே, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இதனால், அந்த மூட்டுவலி மறுபடியும் வந்துவிட்டதாம் எடப்பாடிக்கு. இதுகுறித்துதான் நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது..
மூட்டுவலி: மூட்டுவலி அதிகமாகிவிட்டதாம், கேரளாவில் தனியார் ஹோட்டலில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக நேற்று முன் தினம் அவசரமாகக் கிளம்பிச் சென்றுள்ளார்.
பிறந்தநாள் வருகிறது என்பதால், அன்றைய தினத்தில் கட்சியினரிடம் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டுவிட்டு, அதன் பிறகு ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா செல்லலாம் என்றுதான் எடப்பாடி திட்டமிட்டிருந்தாராம். அதற்கேற்ப தனியார் ஹோட்டலில் இவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்ததாம். இந்தநிலையில், 3 நாட்களுக்கு முன்பு கடுமையான மூட்டு வலி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவஸ்தைப்பட்டிருக்கிறார்.
ஆயுர்வேத சிகிச்சை: இதனையடுத்து ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்களுடன் எடப்பாடி கலந்து பேச, "உடனடியாக கிளம்பி வாருங்கள், அலட்சியம் காட்டவேண்டாம். அட்லீஸ்ட் ஒரு நாளாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் செய்யப்பட்டதன் பேரில் அவசரமாக கிளம்பி கேரளா சென்றார் என சொல்கிறார்கள் அதிமுகவினர்.
கடந்த 2021- தேர்தலின்போதும் ஓயாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது. இதனை சரி செய்ய கேரளாவில் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை எடுத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.. வலியும் குறைந்து குணமானது. இப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றை ஆளாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய சுற்றி வந்தார். மீண்டும் மூட்டு வலி ஏற்பட்டுள்ளது என்றும் அதிமுகவினர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications