"சாணக்கியன்" கமல்ஹாசன்.. பட்டென இப்படி ஒரு முடிவா.. ஆஹா, டென்ஷன் கூடுதே.. டோட்டலா மலைக்கும் கட்சிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமலின் மநீம போட்டியிடும் என்கிறார்கள்
சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலுக்கு, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் இப்போதே மும்முரம் காட்டி வரும்நிலையில், அதற்கான களப்பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.. மேலும் ஒருசில முக்கிய தகவலும் அதுகுறித்து உலா வந்து கொண்டிருக்கின்றன.
குட்டி குட்டி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2019 எம்பி தேர்தலை சந்தித்து, 3.78 சதவீத வாக்குகளை பெற்று, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார் கமல்..
தமிழகத்தில் இப்படி கலக்கிய அதேசமயத்தில்தான், அந்தமானில் மநீமய்யத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

சரத்குமார்
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சரத்குமாருடன் கூட்டணி வைத்து, போட்டியிட்டது. ஆனால், மய்யம் சரிவை நோக்கி போய்விட்டது... வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்துவிட்டது.. கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், வேறு வேறு கட்சிகளுக்கு பறந்துபோய்விட்டனர்.. அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், நிர்வாகிகளின் கட்சி தாவல்கள் போன்றவற்றால் கமல் சோர்ந்து போயிருந்த நிலையில்தான் விக்ரம் படம் புது தெம்பை தந்தது.. சினிமாவிலும் சரி, அரசியலும் சரி, ஒரு துடுப்புபோல இந்த படம் வந்து சேர்ந்தது.. உதயநிதியின் தொடர்பால், திமுக கூட்டணி என்ற சலசலப்பும் வட்டமடிக்க ஆரம்பித்தது.

சறுக்கல்கள்
கடந்த தேர்தல்களில் பெற்ற சறுக்கல்களை இந்த முறை பெறக்கூடாது என்பதில் கமல் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. இதற்காக முதல்கட்டமாக தன்னுடைய கட்சியை பலப்படுத்த முனைந்து வருகிறார்.. மற்றொருபக்கம் வலுவான கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால்தான், எதிர்கால அரசியலுக்கு நல்லது என்றும் முடிவெடுத்துள்ளார்.. ஆனாலும், கமல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே பாஜகவின் "பி டீம்" என்ற விமர்சனத்தை சந்தித்து வருவதடன், இந்த விமர்சனம் இன்னமும் அதிகமாகி கொண்டேதான் வருகிறது.. இதை சுக்குநூறாக உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கமல்..

கைகோர்க்கும் கமல்
அதனாலேயே ராகுலுடன் 'கை' கோரும் சூழலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிகிறது.. காங்கிரசுடன் கமல் கூட்டணி அதுவும் காங்கிரஸ் இருக்கும் அணி பலமான அணியாகவும், பாஜகவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்று கமல் நம்புகிறாராம்.. மேலும், கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளாராம்.. கமல் தேசம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதால், காங்கிரசுக்கும் இப்படியான ஒரு முகம் தேவைப்படுகிறது.. அது ராகுலுக்கு வலு சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.

கிங் மேக்கர்
தேசிய அளவில், கமலை பொறுத்தவரை, கேரள பினராயி முதல் டெல்லி கெஜ்ரிவால் வரை அனைவருடனும் இணக்கமான நட்பை கொண்டிருக்கிறார்.. பாஜகவுக்கு எதிரான கூட்டணியையும் கமலால் உருவாக்க முடியும் என்கிறார்கள்.. அதாவது, ராகுல் + கமல் + திமுக + கம்யூனிஸ்ட்கள், விசிக என்ற கூட்டணி உருவாகும்பட்சத்தில், அது பாஜகவுக்கு மிகப்பெரிய சிக்கலை தமிழகத்தில் உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.. நாடு முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதால், அந்தந்த மாநில மொழிகளில் பிரச்சாரமும் செய்து, வாக்குகளையும், ரசிகர்களையும் தன்பக்கம் கவரும் திறமை கூடுதலாக உள்ளது என்பதை மறுக்க முடியாது..

வாய்ஸ்
தேசிய அளவில் இப்படி ஒரு கணக்கு என்றால், உள்ளூர் அரசியலையும் கமல் விட்டுவைப்பதாக இல்லை.. அதனால்தான், சமீபகாலமாகவே எந்த ஒரு நிகழ்வு என்றாலும், அதற்கு முதல்நபராக கமல் குரல் கொடுத்துவிடுகிறார்... மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனை என்றாலும், அதை உடனே அம்பலப்படுத்தி, ட்வீட்போட்டு சம்பந்தப்பட்டவர்களை நறுக்கென கேட்டு வருகிறார்.. வரும் எம்பி தேர்தலில் கோவை தெற்கு, அல்லது ராமநாதபுரம் தொகுதி என ஏதாவது ஒன்றில் கமல் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் கசிந்து வரும்நிலையில், இன்னொரு முக்கிய தகவலும் வட்டமடிக்கிறது.

கோதாவில் மநீம
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. வழக்கமாக, ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்பது விதி.. எனவே, வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்த இடைத்தேர்தலுக்கு அதிமுக, காங்கிரஸ், திமுக, பாஜக என 4 கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.

கோட்டை
இந்த லிஸ்ட்டில் கமலும் இணைவதாக தெரிகிறது.. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஈரோடு கிழக்கு தொகுதியில், மநீமய்யமும் களம் இறங்கப்போவதாக கூறப்படுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. அதுமட்டுமல்ல, இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவார் என்று சொல்லப்படும்நிலையில், இதே தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் போட்டியிடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது, உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒருவேளை மநீம, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, குறிப்பிட்ட வாக்குகளை பெற நேர்ந்தால், அது வரப்போகும் எம்பி தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படும்.. என்னதான் நடக்கப்போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications